மனிதர்களை விடுத்து நாய்களுக்கு பாதுகாப்பு கேட்பவர்கள் தான் விலங்கு நல ஆர்வலர்களா.?


தெரு நாய்கள் பிரச்னையை விட விலங்கு ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்களை பார்த்தால் தான் பயமாக இருக்கிறது. அவர்கள் முன் ஒரு கேள்வியை முன்வைக்க வேண்டியருக்கிறது. நீங்கள் தெரு நாய்களுக்காக எத்தனை ஆயிரம் ரூபாய்களை செலவளித்திருப்பிரகள்.? அவற்றிற்காக அரசிடம் எத்தனை முறை கோரிக்கைகள் வைத்து போராடியிருப்பீர்கள்,? அவற்றின் நலனுக்காக நீதிமன்ற படியேறி உள்ளீர்களா.? அவற்றின் இனப்பெருக்க காலத்தில் முறையாக உணவு அளித்திருப்பீர்களா.? அவற்றிற்கு முறையாக உணவு அளிக்க உங்களால் முடியுமா.? அவற்றின் உணவு தேவையை உறுதி செய்ய அரசுடன் போராடியிருக்கிறீர்களா.? விலங்குகள் நலனுக்காக போராடி அவற்றை பாதுகாப்பதற்கு இங்கு யார் தடையாக இருக்கிறார்கள்.? விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படாமல் முடங்கி கிடப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதே.? நீங்கள் அந்த மையங்களுக்கு சென்று எத்தனைமுறை ஆய்வு செய்தீர்கள்.? நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களுக்கு உங்கள் பதில் என்ன.? அப்பாவிக் குழந்தைகள் நாய்களால் கடித்துக் குதறப்படும் போது, நீங்கள் அரசிடம் கோரிக்கை வைத்து அந்த நாய்கள் மீது மருத்துவ பரிசோதனை செய்யக்கூறி மனு அளித்துள்ளீர்களா.? தெரு நாய்கள் அனைத்திற்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று உங்களால் உறுதி செய்ய முடியுமா.? வெளியூர் பயணத்தை முடித்து நள்ளிரவில் ஊருக்கு திரும்பும் எத்தனை பேர் நாய்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து பேருந்து நிலையங்களில் விடியும் வரை காத்திருக்கிறார்கள் என்பதை அறிந்துள்ளீர்களா.? இரு சக்கர வாகன ஓட்டிகள் எப்படியெல்லாம் தெரு நாய்களால் விபத்தில் சிக்குகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா.? நீங்கள் விலங்கு நல ஆர்வலர்கள் என்று உங்களை மட்டும் தாக்காமல் விட்டு விடுமா.? முதலில் மனிதர்களுக்கான பாதுகாப்பை முதலில் உறுதி செய்யுங்கள். குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
நாடு முழுவதும் அதிகரித்துவரும் தெருநாய்கள் தொல்லை குறித்து உச்சநீதி மன்றம் கவலை தெரிவித்து, தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தெரு நாய்கள் தாக்குதல்கள் குறித்து, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது. தெரு நாய் கடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த நீதிமன்றம், இந்த விஷயத்தில் யாரும் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

டெல்லி என்.சி.ஆர் பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், விலங்குகள் மற்றும் நாய் பிரியர்களை கடுமையாக நீதிமன்றம் விமர்சித்தது. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மரணத்துக்கு அவர்கள் பொறுப்பேற்க முடியுமா.? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், என்.சி.ஆர் பகுதியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளது.

தெரு நாய் கடியின் அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வலியுறுத்தியுள்ளார். ஒரு சில தனி நபர்கள் விலங்கு பிரியர்களாக இருப்பதால், குழந்தைகளை இழக்க முடியாது என்று அவர் கூறினார். இதன் தொடர்ச்சியாக, அனைத்து தெரு நாய்களையும் உடனடியாக பிடித்து, நகரத்திற்கு வெளியே தொலைவான இடத்தில் கொண்டு சென்று விட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி என்.சி.ஆர் அதிகாரிகள் தெரு நாய்களை பிடித்து, கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, நாய் காப்பகங்களில் பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அப்போது, விலங்கு நல ஆர்வலர் ஒருவர், டெல்லியில் ஏற்கெனவே விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்துவதன் மூலம் பிரச்சனையை தீர்க்கலாம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதற்கு நீதிபதி பர்திவாலா எதுவும் வேலை செய்யவில்லை. இது செயல்பட வேண்டிய நேரம். இந்த விலங்கு ஆர்வலர்கள், தங்களை விலங்கு பிரியர்கள் என்று கூறிக்கொள்வோர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிரை திரும்ப கொண்டு வர முடியுமா? அந்த குழந்தைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியுமா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

இந்த உத்தரவு செல்லப்பிராணிகளை பாதிக்காது என்று வழக்கறிஞர் ஒருவர் கூறினார். அதற்கு நீதிபதிகள், உங்கள் தெருநாய் ஒரே இரவில் செல்லநாய் ஆகிவிடக்கூடாது என்று கருத்து தெரிவித்தனர். தெரு நாய்களை பிடிப்பதற்கு ஒரு பலமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நகரத்திலோ, அல்லது புறநகர், பகுதிகளிலோ ஒரு தெரு நாய் கூட இருக்கக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, கருத்தடை செய்வதன் மூலம் நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்கலாம். ஆனால், அது ரேபிஸ் நோயை தடுக்கும் சக்தியை எடுக்காது என்று மேத்தா கூறினார்.

தெருநாய்கள் தொடர்பான இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவும் மூத்த வழக்கறிஞர் கௌரவ் அகர்வால் கருத்துக்களை நீதிமன்றம் கேட்டறிந்தது. இந்த வழக்கில் தலையிட விரும்புவதாக சில வழக்கறிஞர்கள் கூறியபோது, நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து விட்டது. கௌரவ் அகர்வால் மற்றும் மேத்தா ஆகியோரின் கருத்துக்களை மட்டுமே கேட்போம் என்று நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது. குழந்தைகள், சிறிய குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் நாய்க்கடிக்கு ஆளாகும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பெரிய பொது நலனுக்காக செயல்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பாக சைக்கிள் ஓட்டவும், விளையாடவும், வயதானவர்கள் நடைபயிற்சி செல்லவும் இது உதவும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்நிலையில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் இந்தியா முழுமைக்குமான ஒரு உத்தரவு வழக்கப்படவேண்டும். விலங்கு நல ஆர்வலர்கள் முதலில் மனிதநல ஆர்வலர்களாக சிந்திக்க தொடங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில், தெரு நாய்களுக்கு எதிராக குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அரசிடமோ, நீதிமன்றத்திடமோ, நீங்கள் முறையிடுவதை இங்கு யார் தடுக்கப்போகிறார்கள். அவ்வாறு நடந்தால் நாங்களும் மனிதர்கள் தான் அந்த சமூக விலங்குகள் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. நாங்களும் உங்களுடன் சேர்ந்தே போராடுவோம். முதலில் மனித உயிர்களுக்கு மதிப்பளியுங்கள்.
        -ஆசிரியர்


banner

Related posts

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. சுந்தரேசனுக்கு திடீர் நெஞ்சுவலி

Admin

முருகன் மாநாடு: எடப்பாடி பழனிச்சாமி மீது முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தி.! அதிமுகவில் நடப்பது என்ன?

Admin

எடப்பாடி முதுகில் குத்தி விட்டதாக நான் சொல்லவில்லை.. ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகிறது – பிரமலதா விஜயகாந்த்

Ambalam News

Leave a Comment