தெரு நாய்களால் மனிதர்களின் உயிருக்கு அன்றாடம் அச்சுறுத்தல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, தெருநாய்கள் விஷயத்தில் உச்சநீதி மன்றம் கடுமை காட்டியிருக்கிறது. இந்த நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருகின்றனர். தினந்தோறும் சாலைகளில் திரியும் நாய்களால் பொதுமக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதையெல்லாம் அரசோ விலங்கு நல ஆர்வலர்களோ கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. நாய் பிரச்னைக்கெல்லாம், உச்சநீதி மன்றம் சாட்டையை சுழற்ற வேண்டியிருக்கிறது.
உளுந்தூர்பேட்டை அருகே 5 பேர் கார் ஒன்றில் கெடிலம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நாய் குறுக்கே வந்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். பொதுமக்கள் முதலுதவி செய்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இதற்கெல்லாம் பதில் சொல்வது யார்.? அரசா.? விலங்கு நல ஆர்வலர்களா.?
Related posts
Click to comment