சூளைமேடு கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்.. வாய் கட்டப்பட்டிருந்ததாக மாநகராட்சி கட்டுக்கதை.!?



சென்னை சூளைமேடு வீரபாண்டி நகர் முதல் தெருவில் சாலையோரத்தில் உள்ள வடிகால்வாயில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக கிடந்தார். பெண்ணின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பெண் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மழைநீர் வடிகால்வாயில் மூடி பொருத்தப்படாத நிலையில், அதில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் இறந்த பெண் மாற்றுத்திறனாளி, வீட்டுவேலை செய்து குடும்பத்தையே காப்பாற்றி வருகிறார் என்று உறவினர்கள் கூறும்போது நெஞ்சை உருக்கும் துயரமாக இருக்கிறது.
இந்நிலையில், மழை நீர் வடிகால்வாயில் தவறி விழுந்து பெண் உயிரிழக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்தது. உயிரிழந்த பெண்ணின் வாய் கட்டப்பட்ட நிலையில், இருந்ததாகவும் மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் தந்தனர்.
ஆனால், இதை மறுத்துள்ள காவல்துறை, பெண்ணின் வாயில் துணி எதுவும் கட்டியிருக்கவில்லை எனவும், அவர் தவறி விழுந்து உயிரிழந்தததற்கான ஆதாரம் இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
நடந்த விபத்தை, கொலை என்று திசை திருப்ப மாநகராட்சி அதிகாரிகள் முயன்றுள்ளனர். அப்பகுதி முழுவதும் மாநகராட்சியால் தோண்டப்பட்டு ஆபத்தான நிலையில், இருப்பதாக இறந்த பெண்ணின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் குற்றச்சாட்டை முவைக்கின்றனர். இறந்த ஊனமுற்ற பெண்ணின் மகளுக்கு முறையான உதவிகளை அரசு செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


banner

Related posts

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை .? தவெக தரப்பில் உயர்நீதிமன்ற நீதிபதியிடம் மனு!

Ambalam News

சொத்து குவிப்பு : பாஸ்போர்ட் அதிகாரியின் சொத்துகளை சி.பி.ஐ. நீதிமன்றம் பறிமுதல் செய்தது..

Ambalam News

திருச்சி அரசு மருத்துவமனை – போதுமான வசதிகள் இல்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு

Admin

Leave a Comment