எடப்பாடி பழனிச்சாமி – தினகரனை அலறவிடப்போகும் சசிகலாவின் புதுக்கட்சி பிளான்..!?


ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில் ஆரம்பம் முதலே அவரின் நிழலாக அதிமுக கட்சித் தொண்டர்களால் சின்னம்மா என்று அறியப்பட்டவர் நிழல் முதல்வர் என்று வர்ணிக்கப்பட்டவர் அதிமுகவின் அதிகாரமையமாக மையமாக மட்டுமின்றி அதிமுக அரசின் அதிகாரமையமுமாக வலம் வந்தவர் சசிகலா. இன்றைய அதிமுகவின் பொதுச் செயாலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை அவரது காலில் விழுந்து அவரது கடைக்கண் பார்வையில் முதலமைச்சாராகவும் அமைச்சர்களாகவும் ஆக்கப்பட்டவர்கள்தான் என்பது தமிழக அரசியலில் பதிவு செய்யப்பட்ட உண்மை.

அப்படி அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த சசிகலா சரிந்த கதையையும் நாடறியும். ஜெயலலிதாவுக்கு அடுத்து சசிகலாதான் அதிமுகவின் பொதுச் செயலாளர் அனைத்தும் அவர்தான் என்ற நிலைதான் அன்று நிலவிவந்தது. அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் பெரும்பாலானோர் இதைத்தான் விரும்பினார்கள். ஜெயலலிதாவின் திடீர் மறைவிற்கு பின் தமிழக அரசியலில் ஜெயலலிதாவிற்கு பிறகு ஒரு அதிகார மையமாக உருவெடுக்க முயன்ற சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றது அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய முட்டுக்கட்டையாகவும் அந்த தருணத்தில் அவர் எடுத்த முடிவுகள் அவருக்கு பிற்காலத்தில் பெரும் சரிவாகவும் அமைந்தது.

அவர் சிறைக்கு சென்றபோது எடப்பாடி பழனிசாமியை முதல்வராக முன்மொழிந்துவிட்டுச் சென்றார். ஆனால், 4 ஆண்டுகள் கழித்து அவர் விடுதலையாகி வரும்போது, அதிமுகவின் முழுக் கட்டுப்பாடும் எடப்பாடி பழனிசாமி வசம் சென்றிருந்தது. சசிகலா கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இருப்பினும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவை ஒன்றிணைக்கப் போவதாகக் கூறி வந்தார். கட்சித் தலைமை அவருக்குச் சாதகமான எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்பதை விட அவரை முழுவதுமாக முடக்கிவிடவே வேகம் காட்டியது.

தனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாட்டை நகர்வை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு சசிகலா தள்ளப்பத்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக தனது ஆதரவாளர்களையும், அதிமுகவிலிருந்து அதிருப்தியில் வெளியேறியவர்களையும் தொடர்ந்து சந்தித்து வந்த சசிகலா, தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர்.

தற்போது இன்று சசிகலா பசும்பொன்னில் தனது புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.? என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதிமுகவிலிருந்து முழுமையாக ஓரங்கட்டப்பட்ட நிலையில், தனது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கவும், ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாடம் புகட்டவும் தனிக்கட்சி என்ற அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த முடிவானது, தென்மண்டல அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று பசும்பொன்னில் அவர் நிகழ்த்த உள்ள உரையில், புதிய அரசியல் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் நேற்று முதலே தெரிவிக்க துவங்கிவிட்டன. டிடிவி தினகரன் ஏற்கனவே ஒரு கட்சியை நடத்தி வரும் நிலையில், சசிகலா தனியாக ஒரு அமைப்பை தொடங்குவது என்பது தென் மாவட்ட அரசியலில் குறிப்பாக முக்குலத்தோர் மத்தியில் கண்டிப்பாக பெரும் அதிர்வுகளையே ஏற்படுத்தும் தென் மண்டலத்தை பொறுத்தவரை முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகள் அதிமுகவின் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது.

முக்குலத்தோர் வாக்குகள் சிதறினால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை அது பாதிக்கும் காரணியாக அமைந்து விடும். ஒருபுறம் ஓ.பன்னீர்செல்வம் தனது பலத்தைக் காட்ட முயல்கிறார், மறுபுறம் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்து செயல்படுகிறார். இப்போது சசிகலாவும் தனிப்பாதையில் பயணிக்கத் தொடங்கினால், அதிமுகவின் நிரந்தர வாக்கு வங்கி சிதறுவதை தவிர்க்க முடியாது.

சசிகலா சுமார் 30 கும் மேற்பட்ட தொகுதிகளில் தனது பலத்தை நிரூபிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு இது மிகப்பெரிய தலைவலியாகவே அமையும். அதிமுகவின் வெற்றி வாய்ப்புகளை நேரடியாக பாதிக்கும் காரணியாகவும் பார்க்கப்படுகிறது.

சசிகலாவை பொறுத்தவரை அறிவிப்பு வெறும் தேர்தல் அரசியலுக்கானது மட்டுமல்ல. அதிமுகவில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட எஞ்சியிருக்கும் கடைசி ஆயுதமாகவும் கருதப்படுகிறது. வரும் தேர்தலானது திமுக, அதிமுக, தவெக எனப் பல முனைப் போட்டிகளாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில், சசிகலாவின் வருகை அதிமுகவுக்கு பெரும் தலைவலி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இன்று சசிகலா வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு என்ன என்பதை அறிந்து கொள்ள அனைத்து கட்சியினரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். நாமும் காத்திருப்போம்..!!


banner

Related posts

கவின் காதலி சுபாஷினி வெளியிட்ட வீடியோ – பின்னணி என்ன.?

Ambalam News

திமுக ஆட்சி… மக்களின் மனநிலை என்ன..? முதல்வரின் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சி..

Ambalam News

“த.வெ.க. செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது திமுக’’! – த.வெ.க விஜய்.. ஆனந்த் மீதான வழக்கிற்கு கண்டணம்..

Ambalam News

Leave a Comment