நெல்லை மாவட்டம் திசையன்விளைய திக் திக்… எரிந்த காரில் 4 சடலங்கள்.. அதிர்ந்த போலீஸ்..அதிமுகவின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் தொடர் சம்பவங்கள்..


தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.கொலை, கொள்ளை, போதை மருந்து புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புகார்கள் முன் வைக்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் போராட்டத்தை அறிவித்து போராட்டிவரும் வேளையில் திருநெல்வேலி திசையன்விளை அருகே எரிந்த காரில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவுக்கு எதிராக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர். இந்நிலையில், திருநெல்வேலி திசையன்விளை அருகே எரிந்த காரில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே பெட்டைகுளம் பகுதியில் சாலை ஓரமாக எரிந்த நிலையில் ஒரு கார் நின்றுள்ளது.. அந்த காரில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது இதன்காரணமாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது, காரில் இருந்து கருகிய நிலையில் 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் அந்த கார் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது விபத்தா.? அல்லது கொலையா.? காரில் ஏதும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு தீவிபத்து ஏற்ப்பட்டதா.? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


banner

Related posts

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகிய இருவரும் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Ambalam News

விஜய் தேவரககொண்டாவின் கிங்டம் படத்திற்கு வைகோ கண்டனம்

Ambalam News

தவெக அரசின் முதல்வர் விஜய் கொண்டுவந்த ”சிங்கப் பெண்” திட்டம் | பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக்கும் தவெக | வாயை திறங்க CM.?

Ambalam News

Leave a Comment