தமிழக மனிதவளத்துறை தற்போதைய அமைச்சர் சரத்குமார் 2 வருடத்திற்கு முன்பு கிரிக்கெட் போட்டி நடக்கும்போது, ஸ்டேடியத்தில் அமர்ந்து செல்போன் மீது எதையோ கொட்டி பொடி செய்யும் வீடியோ வெளியான நிலையில், அது உயர் ரக போதைபொருள் பயன்படுத்தும் முறை அது போதைபொருள் தான் என்ற விவகாரம் சூடு பிடித்திருக்கிறது. அந்த வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் தக்லைப் (Thug life moment ) என்று பெயரிட்டு அவரே வெளியீட்டுள்ளார்.

போதை ஒழிப்பு மாரத்தான் நடந்த நிலையில், இந்த வீடியோ வெளியாகி ஆளும் தரப்புக்கு நெருக்கடியை ஏற்ப்படுத்தியிருக்கிறது. இருப்பினும் வழக்கம்போல முதல்வர் விஜய் வாய் திறக்காமல் மௌனமாக இருந்து வருகிறார்.
அமைச்சர் சரத்குமாரோ, குழந்தைக்காக மாத்திரை போட்டி செய்தேன் என்று விளக்கமளித்திருப்பது சந்தேகங்களை கூட்டியுள்ளது. அந்த வீடியோவில் அவரது குழந்தை காணப்படவில்லை.
இது குறித்து, திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் அமைச்சர் கீதா ஜீவன் அமைச்சர் சரத்குமார் நிருபர்கள் முன்னிலையில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கிக் டெமோ காட்டவேண்டும். மருத்துவ பரிசோதனைக்கு தயாரா.? என்ற கேள்வியை ஊடகத்தினர் முன் வைத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. @sarath0828 அவர்கள், பொதுவெளியில் போதைப்பொருள் உபயோகித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், அதற்கு அவர் கொடுத்துள்ள தன்னிலை விளக்கமும் கடும் அதிர்ச்சியளிப்பதோடு பல்வேறு சந்தேகங்களையும் கிளப்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார்
மேலும், சுமார் 4 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, “ஆன்டிபயாடிக்” உள்ளிட்ட வீரியமிக்க மருந்துகளையே, மருத்துவர்கள் “டானிக்” வடிவில் கொடுத்துக் கொண்டிருக்கையில், ஒன்றரை வயது குழந்தைக்கு எந்த மருத்துவர் மாத்திரை கொடுத்தார்? அங்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தக் குழந்தையையும் காணவில்லை, உடல்நிலை சரியில்லாத குழந்தையை எங்கேயோ விட்டுவிட்டு தகப்பன் ஜாலியாக கிரிக்கெட் போட்டியை ரசித்துக் கொண்டே மாத்திரையை நுணுக்கிக் கொண்டிருந்தாரா? குறிப்பாக, குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரையை, யாராவது போதைப் பொருள் போல கோடிழுத்துக் கொண்டிருப்பார்களா? மாத்திரையைக் கூட போதைப்பொருளைப் போலவே “ரெடி” செய்யும் மனநிலை கொண்டவர் எப்படி நிதானமாக மக்கள் சேவையாற்றுவார்?
இதுபோன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பும் இவ்விவகாரத்தை, முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் எவ்வித சமரசமுமின்றி தீர விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சமூக வலைதள பக்கங்களில்.. தங்களின் தாமதத்தாலும், பொறுப்பின்மையாலும் ஏற்பட்ட கரூர் சம்பவத்தை திசைதிருப்ப ஆன்லைன் கூலிப்படையை வைத்து, ‘கூட்டத்திற்குள் புகுந்து தாக்கினார்கள்’ என்றெல்லாம் ஆளுங்கட்சி மீது சினிமாத்தனமாக தவேக பழி போட்டது..
ஒரு விவாகரத்து வழக்கை, “நம்ம கூட இருந்தவங்களையே நமக்கெதிரா திருப்புறாங்க” என்று அதற்கு கூச்சமின்றி அரசியல் சாயம் பூசியது..
தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை யாருமே பொருட்படுத்தாத போதும், தனக்கெதிராக மாபெரும் சூழ்ச்சி நடப்பதாக சித்தரித்தது..
இப்படி எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திசைதிருப்பலாம், நியாயப்படுத்தலாம் என்ற தனது தலைவனின் பாணியில் இன்று ஒருவர், ‘கிரெடிட் கார்டை வைத்து குழந்தைக்காக மாத்திரையை நசுக்கினோம்’ என்பதெல்லாம் ஒரு விளக்கமாக கொடுத்து நம் காதில் பூ சுற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களை எந்தளவுக்கு முட்டாள்களாக, மழுமட்டைகளாக இவர்கள் மதிப்பிட்டிருந்தால் இப்படியெல்லாம் பொதுவெளியில் பேசுவார்கள்? மக்களைப் பற்றிய அவர்களின் மோசமான மதிப்பீட்டை மக்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு சகிக்கப்போகிறார்கள்.? என்று பலரும் தவெக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தவெக அரசின் போதைப் பொருட்கள் ஒழிப்பையும் அமைச்சர் மீது எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்!

