ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு.. சட்டசபையில் வரலாறு தெரியாமல் கலைஞரை குறிப்பிட்ட சிடிஆர் நிர்மல்குமார்! – மஞ்சள் துண்டின் பின்னணி என்ன?


சட்டசபையில் அமைச்சர் சி.டிஆர். நிர்மல்குமார், ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் ஏற்கனவே தமிழ்நாடு பார்த்துவிட்டது என்று கலைஞர் கருணாநிதியை குறிப்பிட்டு பேசி இருந்தார். இந்த நிலையில் கலைஞர் கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்தது ஏன் என்பது தொடர்பாக பார்க்கலாம்.

சட்டசபையில் 2 நாட்களுக்கு முன் முதல்வர் விஜய் பேசுகையில், திமுக ஆட்சியில் 3 துறைகளில் நடந்ததற்கான ஆதாரங்கள் என் மேஜையில் உள்ளது. அதனை திறக்க வைத்துவிட வேண்டாம்.. அதனை எப்போது வெளியிட வேண்டுமோ.! அப்போது திறக்கப்படும் என்று சூசகமாக மிரட்டும் தொனியில்.? பேசி இருந்தார்.

இதுதொடர்பாக இன்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகையில், டேபிள் முன் இருக்கும் ஃபைல்களை திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்று முதல்வர் பேசி இருந்தார். அதனை திறந்து பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜோசியக்காரன் சொன்னால் தான் அதனை திறந்து பார்ப்பீர்களா.? என்று கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி கேள்வி எழுப்பினால், நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பதிலை கொடுக்கிறார்கள் என்று தெரிவித்தார். இதற்கு எழுந்து பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதில் அளிக்கையில், ஜோசியம் என்று சொன்னார்கள்.. ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் ஏற்கனவே தமிழ்நாடு பார்த்துவிட்டது. அதனால் எதை செய்தாலும் எந்த ஒளிவுமறைவின்றி செய்ய தெரியும். எல்லா துறைகளிலும் விதிமீறல் இருந்தால், வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். அமைச்சார் சிடிஆர் நிர்மல்குமார் ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு அணிந்த வரலாறு என்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை குறிப்பிட்டதாகவே தெரிகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 1994ஆம் ஆண்டு முதலே மஞ்சள் துண்டு அணிய தொடங்கினார். 1994ல் அவருடைய கன்னத்தில் சிறிய வீக்கம் ஏற்பட்டது. அவருடைய உமிழ்நீர்ச் சுரப்பில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக இது ஏற்பட்டது.

அப்போது மருத்துவர்கள் தரப்பில் கன்னம் பகுதியை கதகதப்பாக வைத்து கொள்ள சால்வை ஒன்றை அணிந்தால் நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், 1989ல் திமுக ஆட்சிக்கு வந்த பின் மிகவும் பிற்படுத்தவர் பட்டியல் என்று ஒன்று வெளியிட்டு அதில் வன்னியர்களையும் இனைத்து 20 சதவிகிதம் கொடுத்தார். அப்போது வன்னியர் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பாமக தலைவர் ராமதாஸ் மஞ்சள் துண்டை கலைஞர் கருணாநிதிக்கு அணிவித்தார். அந்த மஞ்சள் துண்டு கலைஞருக்கு பிடித்து போனதால், கடைசி வரை மஞ்சள் துண்டுடனே வலம் வந்தார். இது போன்ற எத்தனையோ விமர்சனங்கள் கலைஞர் கருணாநிதி மீது வைக்கப்பட்ட போதும் அவர் அவர் மஞ்சள் துண்டு அணிவதை கைவிடவில்லை.

இந்த வரலாறும் அரசியல் பின்னணியும் தெரியாமலேயே அமைச்சர் சி.டிஆர். நிர்மல்குமார் சட்டசபையில் பேசியிருக்கிறார்


banner

Related posts

எடப்பாடி பழனிச்சாமி தூக்கத்தை கெடுத்த அமித்ஷா – நிர்மலா சீதாராமன் – செங்கோட்டையன் சந்திப்பு.! – அடுத்தது என்ன .?

Ambalam News

கொங்குமண்டலத்தை குறிவைக்கும் தவெக| செங்கோட்டையனின் சபதம்

Ambalam News

அதிமுகவை ICU-வில் அனுமதிக்கும் நிலை விரைவில் வரும்.! – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்..

Ambalam News

Leave a Comment