தவெக அரசின் முதல்வர் விஜய் கொண்டுவந்த ”சிங்கப் பெண்” திட்டம் | பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக்கும் தவெக | வாயை திறங்க CM.?


”தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி போடக்கூட முடியாத திமுக அரசு” என்று விமர்சித்த தவெக நிரந்தர டிஜிபியை வைத்துக் கொண்டு ஏன் பெண்களையும் சட்டம் ஒழுங்கையும் காப்பாற்ற முடியாமல் திணறுகிறது என்ற கேள்வி தமிழகத்தில் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது

தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண் திட்டத்தை கொண்டு வந்துவிட்டதாக சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது கட்சியினரே தனிமனித ஒழுக்கமில்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். தனிமனித ஒழுக்கமில்லாத ஒரு கூட்டத்தை வைத்து கொண்டுதான் இவர் தமிழக பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கப் போகிறாரா.? என்ற கேள்வியை கோட்டையை நோக்கி வீசுகின்றனர் தமிழக மக்கள்.

இந்த கேள்விகளுக்கு சிகரம் வைதாற்போல சேலத்தில் 50 பெண்களை மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தவெக பிரமுகர் மணிகண்டன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகேஸ்வரன், மாணவிகளை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி தவெக நிர்வாகி மகன் உல்லாசம், திருவாரூரில் திருத்துறைப்பூண்டி தெற்கு தவெக ஒன்றிய செயலாளர் ஆனந்த் அவருடைய நண்பர் அசோக் ஆகியோர் பெண்ணிடம் பாலியல் சிந்தளில் ஈடுபட்டு கைதாக்கியுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பாளிப்போம் என்று ஆட்சிக்கு வந்து சிங்கப்பெண் படையை உருவாக்கிய தவெக ஆட்சியில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடும் தவெக நிர்வாகிகள் பட்டியல் நீள்கிறது.

தமிழகத்தில் கடந்த 35 நாட்களில் 175 பாலியல் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி போடக்கூட முடியாத திமுக அரசு என்று விமர்சிக்கும் தவெக நிரந்தர டிஜிபியை வைத்துக் கொண்டு ஏன் பெண்களையும் சட்டம் ஒழுங்கையும் காப்பாற்ற முடியாமல் திணறுகிறது. ஏன் தமிழகத்தில் திடீரென பாலியல் குற்றங்கள் அதிகரிக்க தொடங்குகிறது என்ற கேள்விகக்கு முதல்வர் ஊடகங்களை சந்தித்து விளக்கமாளிப்பாரா.? என்ற கேள்வி சுற்றி சுழலும் நிலையில், அமைச்சர் ராஜ்மோகன் ”இப்போது தான் மக்கள் அதிக அளவில் புகார் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள்” என்கிற ரீதியில் ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.

2026 தேர்தல் பிரச்சாரத்தின் போது, இன்றைய தவெக அரசின் முதல்வராக அமர்ந்திருக்கும் விஜய் தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து களமாடிய நிலையில், தற்போது ” சிறு பெண்கள் இங்கே.! சிங்கப்பெண்கள் எங்கே.? பிஞ்சு குழந்தைகளின் கதறல் சத்தம் கேக்குதா.? வாயை திறங்க CM” என்று கோரிக்கை வைத்துள்ளது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற திமுக.

பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக்கும் தவெக வாயை திறங்க CM.. என்று டிவிட் செய்துள்ளது திமுக ஐ.டி விங். சட்டசபையில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் குறித்து வாயை திறப்பாரா.? முதல்வர் விஜய்.


banner

Related posts

இ.பி.எஸ் திடீர் டெல்லி பயணம் | தொகுதி பங்கீடு விரைவில் அறிவிப்பு.? இ.பி.எஸ். டெல்லி பயணம் குறித்து அதிமுக விசுவாசிகள் வேதனை..

Ambalam News

தமிழக தேர்தல் | தமிழக தேர்தல் பரப்புரைக்கு 6 மாநில முதல்வர்களை களமிறக்கும் பாஜக.!

Ambalam News

விஜய்யுடன் கூட்டணி.? எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.! ஒபிஎஸ்

Ambalam News

Leave a Comment