இ.பி.எஸ் திடீர் டெல்லி பயணம் | தொகுதி பங்கீடு விரைவில் அறிவிப்பு.? இ.பி.எஸ். டெல்லி பயணம் குறித்து அதிமுக விசுவாசிகள் வேதனை..


காங்கிரஸுடன் திமுக தொகுதி பங்கீட்டை முடித்த நிலையில், பாஜக – அதிமுக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அதிமுக – பஜாக தொடங்கவில்லை. கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை அதிமுக ஆரம்பிக்கவில்லை. இது குறித்து டெல்லி பாஜக தலைமையின் உத்தரவுக்கு அதிமுக காத்திருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி புறப்படுவது அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க – பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இத்தேர்தலில்,தி.மு.க – காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தவெக ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. தி.மு.க கூட்டணியில் ஓரளவிற்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் குறித்து அதிமுகவால் எந்த முடிவும் இதுவரை தெரிவிக்கப்பட்டவில்லை. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவது குறித்து விவாதிக்கவே எடப்பாடி பழனிச்சாமியை பாஜக தலைமை அழைத்துள்ளதாகவும், அழைப்பின் பேரிலேயே அவர் டெல்லி சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் அவர் அமித்ஷாவை இன்று சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

தொகுதிப்பங்கீடு குறித்துதான் பேசப்போகிறார் என்பதை உறுதியாக கூற சில காரணங்களை அரசியல் பார்வையாளர்கள் முன் வைக்கின்றனர்.

பாஜக – அதிமுக கூட்டணி முறிவுக்குப் பின் நீண்ட காலங்கள் கடந்து கடந்த ஏப்ரல் 11, 2025 அன்று டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து, 2026 தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியை முறைப்படி உறுதி செய்தார். இந்தச் சந்திப்பில்தான் “தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி” என்பது உறுதி செய்யப்பட்டது.

இரண்டாவது முறையாக ஜனவரி 7, 2026 அன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். இச்சந்திப்பின்போது பாமக உள்ளிட்ட இதர கூட்டணிக் கட்சிகளை இணைப்பது குறித்து அமித் ஷாவுடன் ஆலோசித்து முடிவை அறிவித்தார். இந்த சந்திப்பிலதான் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்த பாஜகவின் கோரிக்கையை அவர் நிராகரித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

மூன்றாவது முறையாக, மார்ச் 2, 2026 அன்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் டெல்லிக்குச் சென்றார். தேர்தல் தேதி அறிவிக்க சில நாட்களே உள்ள நிலையில்,பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் குறித்து அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோருடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார். இந்த பயணத்தின் கூட்டணிக்குள் இருந்து வந்த பூசல்கள் ,இழுபறிகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் தொகுதி பங்கீடு மற்றும் எந்த எந்த தொகுதிகள் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வேண்டும் என்பதை உறுதி செய்யும் என்று கூறுகின்றனர்.

ஓரிரு தினங்களில் பாஜக தலைவர்களுடன் இணைந்து தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

ஆனால், கூப்பிட்ட குரலுக்கெல்லாம் இ.பி.எஸ்.டெல்லி செல்வதை அதிமுகவின் விசுவாசிகள் வேதனையோடு விமர்சிக்கின்றனர். பாஜகவின் இந்த அதிகார போக்கால் அதிமுக மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கும் சூழல் இருப்பதாக கூறுகின்றனர். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது கூட்டணி பேச்சு நடத்த (வாஜ்பாய் காலத்தில்) போயஸ் கார்டன் இல்லத்திற்குத்தான் பாஜக நிர்வாகிகள் சென்று வந்தனர். அந்த நிலை மாறிவிட்டதாக கூறுகின்றனர். அதிமுக தலைமை கருத்தில் கொள்ளுமா.?


banner

Related posts

தனிப்படைகளை கலைக்க.? போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு!

Admin

அதிமுக எக்ஸ் எம்.பி.மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்.? அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழும் என்று திமுகவினர் கருத்து.

Ambalam News

குண்டர் சட்டத்தில் கைதான பிரபல நடிகருக்கு சென்னைக்குள் நுழைய போலீஸ் தடை

Ambalam News

Leave a Comment