சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெக ஆட்சிக்கு அதிமுகவின் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவளித்த விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுபிற்கு முன்னதாக சி.வி.சண்முகம், தரப்பை முதல்வர் விஜய் சந்தித்தது குறித்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. குதிரை பேர அரசியல் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மக்கள் மத்தியிலும் விஜய் மீது அதிருப்தி எழுந்துள்ளது. முதல்வர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு விவாதத்துக்குள்ளாகி இருக்கிறது.
அதிமுக தொடங்கிய உட்கட்சி பூசல் – எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகாரப் போக்கு
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தருணத்தில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் விரும்பவில்லை அவர்கள் கட்சிக்குள் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து வருவதை பதிவு செய்திருந்தோம். அதேசமயம் ஒ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், கே.ஏ.செங்கோட்டையன், டி.டிவி.தினகரன் போன்றவர்களை இணைத்து வலுவான அதிமுகவை உருவாக்க வேண்டும் என்ற நிர்வாகிகளின் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து புறக்கணித்து வந்தார்.
மாற்று கட்சிகளுக்கு பறந்த அதிமுக தலைவர்கள்
எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகாரப்போக்கால் நிர்வாகிகள் நிலைகுழந்து போனார்கள். வேறு வழியின்றி ஒ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம் போன்றோர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுகவில் ஐக்கியமாகினர்.
டெல்லி சென்று பாஜக அதிகார மையத்தை அணுகிய செங்கோட்டையனின் கோரிக்கைகள் குறித்து பாஜக தலைமை எதிப்பாடி பழனிச்சாமியிடம் எடுத்து கூறி, இணைப்புக்கு அறிவுறித்திய போதும் அவர் செவிமட்டுக்கவில்லை. செங்கோட்டையன் திடீரென தவெக விஜயிடம் அடைக்கலாமானார். அப்போதே அதிமுகவின் பல முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் அவர்கள் விரைவில் வெளிவருவார்கள் என்று உறுதியாக தெரிவித்தார்.
கூட்டணி கட்சிகளின் பலத்தை நம்பி தோல்வியடைந்த எடப்பாடி பழனிச்சாமி
இப்படி அதிமுகவின் முன்னணி தலைவர்கள் கட்சியை வீட்டு வெளியேறிய நிலையில், பல புது முகங்களுக்கு சீட் கொடுத்து கட்சியினரின் கோபத்திற்கு ஆளானார். கூட்டணி பலத்தை நம்பி 2026 தேர்தலில் களமாடி தோல்வியை சந்தித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது வெறும் 47 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருந்தது.
வெற்றி பெற்ற வேட்பாளர்களை பதுக்கிய நிலையில்.. திமுக அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை
47 அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில் அவர்களை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று பதுக்கினார். அவர்கள் தவெக அல்லது திமுகவிற்கு ஆதரவாக சென்றுவிடுவார்கள் என்பதை அவர் முன் கூட்டியே கணித்திருந்தார்.
இதற்கிடையே, அவர் திமுகவின் ஆதரவோடு முதலமைச்சர் ஆக முயற்சிப்பதாக தகவல்கள் கசிய ஆரம்பித்தது. மறுபுறம் தேர்தலில் தனி மெஜாரிட்டி பெறாத தவெக ஆட்சி அமைக்க தடுமாறியது. ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமி சற்று கவணக்குறைவாகவோ, அல்லது அதிமுக உறுப்பினர்கள் மீது நம்பிக்கை கொண்டு அவர்களை வெளியே விட்டிருந்தாலோ நிச்சயமாக அவர்கள் தவெகவுடன் பேரம் பேசி அப்போதே ஆதரவளித்திருப்பார்கள். இதையெல்லாம் அறிந்தே திமுக தனது கூட்டணி கட்சிகளை தவெகவுக்கு ஆதரவளிக்க அறிவுறித்தியது. திமுகவின் கூட்டணி கட்சியினர் ஆதரவோடு தவெக ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில், அதிமுக உறுப்பினர்களை ரிலீஸ் செய்தார். எடப்பாடி பழனிச்சாமி.
தவெகவுக்கு ஆதரவாக களமிறங்கிய சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி கோஷ்டி
வெளியே வந்த உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி நினைத்தது போலவே அவருக்கு எதிராக திரும்பியதோடு, தவெக ஆதரவு நிலைப்பாட்டை கையிலெடுத்தனர். சட்டமன்றத்தில் தவெகவுக்கு ஆதரவளித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஊடகங்களில் பேட்டியளித்து வருகின்றனர். செங்கோட்டையன் கூறியது நடந்தேறியது.
திமுக மீது பலி சுமத்தும் சி.வி.சண்முகம் குரூப்
அதிமுகவுக்குள் நடந்தேறிய உட்கட்சி பூசலுக்கு திமுகவை பலி கொடுக்க துடிக்கிறது சி.வி.சண்முகம் குரூப். திமுகவுடன் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி வைத்து முதல்வராக துடித்தார். ஆதானால்தான் இந்த பிரிவு என்பதாக ஆதாரமின்றி பேட்டியளித்து வருகிறார்.
இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அறிவாலயத்தில் பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி அவர்களது அதிகார அரிப்பிற்கு திமுக மீது குற்றச்சாட்டை வைப்பதாக கூறியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவுடன் எவ்வித கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கிறார்.
” போறது தான் போற ச்சூன்னு சொல்லிட்டு போ ” கதையாக சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி தரப்பு அவர்களது அதிகார பசிக்கு திமுகவை இழுத்து விட்டுவிட்டு போகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிமுகவினரின் ஆதரவோடு மெஜாரிட்டி
தவெக தரப்பு விசிக இந்திய கம்யூனிஸ்ட் சிபி.எம். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு, ஆட்சி அமைத்திருந்தாலும் அவர்களை நம்பியே காலத்தை ஓட்ட முடியாது பெரும்பான்மை வேண்டும் என்ற நோக்கோடு சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி தரப்பிடம் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு தங்கள் பக்கம் இழுத்து மெஜாரிட்டியை நிரூபித்துள்ளது.
தவெக ஆட்சி மீதான விவாதங்கள் தொடங்கியது
சி.வி.சண்முகம் ஆதரவு பின்னணியில் ஆதவ் அர்ஜுனா, லீமா ரோஸ் மார்ட்டின் கும்பல் இருப்பதாக ஊடகவியலாளர்கள் சமூக ஊடக பக்கங்களில் கூறிவருகின்றனர். சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி கூட்டத்திற்கு தவெக தரப்பிலிருந்து அதிகார சன்மானங்கள் வழங்கப்படும் போது அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும். தவெகவுக்கு ஆதரவளித்துள்ள இந்த முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை அறிந்தே அவர்களது தயவில் ஆட்சியை கொண்டு செல்ல எத்தனிக்கும் முதல்வர் விஜய் எப்படி நேர்மையான ஆட்சியை வழங்குவார் என்ற விவாதங்கள் தொடங்கியிருக்கிறது.
எடப்பாடி பழனிச்சமியின் சர்வாதிகாரப்போக்கு – செங்கோட்டையனின் வாக்கு பலித்து
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அரசியல் இந்த களேபரங்களுக்கு மத்தியில் தவெகவுக்கு ஆதரவளித்த அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து தூக்கி தனது சர்வாதிகார சட்டையை சுழற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக கூடாரம் காலியாகும் என்ற செங்கோட்டையனின் வாக்கு பலித்துள்ளது.
நேர்மையாக ஆட்சி செய்வாரா.? முதல்வர் விஜய் – கூடா நட்பு கேடாய் முடியும்
மக்களிடம் நேர்மையான ஆட்சி வழங்கப்படும் என்று உறுதியளித்து வெற்றி பெற்றுள்ள தமிழக முதல்வர் விஜய் ஆதவ் அர்ஜுனா லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் ஆதரவளித்துள்ள அதிமுக உறுப்பினர்கள் குறித்து தெளிவான முடிவை எடுக்கவில்லையெனில் ” கூட நட்பு கேடாய் முடியும் ”.

