ஆட்சியா.? கட்சியா.? எடப்பாடியாரின் முடிவு என்ன.? நடுத்தெருவில் நிற்கப்போகிறாரா.?செங்கோட்டையன்… அண்ணாமலை மீது பாஜக நடவடிக்கையா.?



சிலைடு சிங்காரம் – கடுப்பு கந்தசாமி – அரசியல் அரட்டை..


ஆட்சியா.? கட்சியா.? என்றால்.? கட்சிதான் முக்கியம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுவார் என அம்பலம் செய்தியில் வந்ததை போலவே கட்சிதான் முக்கியம் என்று பேசியிருக்கிறாரே.!! ‘’துல்லியமான செய்தி’’ என்றபடியே வந்து அமர்ந்தார் சிலைடு சிங்காரம்..
சிங்காரம்…சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்.? அது தான் அவரது எண்ணம் அந்த சுவரை ஓபிஎஸ், டிடிவி. தினகரன் போன்றோர் கைபற்றப் பார்க்கிறார்கள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக்காத்தான் அவரது முடிவும் பேச்சும், செயல்பாடும் இருக்கிறது. இந்த முறை இல்லையெனில், அடுத்த முறை ஆட்சியை பிடித்துக் கொள்ளலாம். ஆனால் கட்சி கையை விட்டு போய் விட்டால், தனது அரசியல் வாழ்க்கையே முடிந்துவிடும் என்ற கணக்கில் தான் அவருடைய காய் நகர்த்தல்கள் அனைத்தும் இருக்கிறது.
இதைத்தான் தனது நெருங்கிய சகாக்களான முன்னாள் அமைச்சர்களிடமும் சொல்லி கன்வின்ஸ் செய்து தன் பக்கம் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இதைத்தான் நான் முன்பே கட்சியா.? ஆட்சியா.? என்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கட்சிதான் என்று முடிவெடுப்பார் என்பதை அழுத்தமாக கூறியிருந்தேன். இப்போது செங்கோட்டையனையும் அதிமுகவில் உள்ள செங்கோட்டையன் ஆதரவாளர்களையும் குறி வைத்தே, கட்சிக்கு துரோகம் செய்தால் நடுத்தெருவில் நிற்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து சொல்ல எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளாரே.?
செங்கோட்டையன் ராமரை சந்திக்க ஹரித்துவார் போன கதை போலதான் இதுவும், சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து சொல்வார். காரணம் ஒன்று காரணகாரியம் நூறு இருக்கும் என்பதைப்போல, அடுத்ததாக அமித்ஷாவை சந்திப்பார். முக்கிய அஜெண்டாவே அதுதானே.!? அமித்ஷா உடனான சந்திப்பில், அதிமுக உட்கட்சி பூசலைவிட அண்ணாமலை அதிமுகவுக்குள் நடத்திய, அரசியல் சதுரங்க ஆட்டத்தையும் வாங்கி குவித்துள்ள சொத்துகள் பற்றியும், அதனால் எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றிதான் முதலில் பேச முடிவெடுத்துள்ளாராம்.
அதிமுகவின் உட்கட்சி பூசல் குறித்தும், செங்கோட்டையன் நிர்மலா சீத்தாராமன் இருவருக்குமான அரசியல் சதுரங்க தொடர்புகள் குறித்தும் விவாதிக்க முடிவெடுத்துள்ளாராம். செங்கோட்டையன். ஓபிஎஸ். டிடிவி.தினகரன் ஆகியோர் அதிமுகவுக்குள் வந்தால் தான் உட்கட்சி பூசலே ஆரம்பிக்கும், அவர்களால் அதிமுக நான்காக உடையும் என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்கூற போகிறாராம். இதனால் செங்கோட்டையன் ஓபிஎஸ் டிடிவி.தினகரன் கனவு பலிக்காது என்கின்றனர் அதிமுகவினர்.
ஆனால், அமித்ஷா என்ன முடிவில் பேசப்போகிறார்.? என்பது தெரியவில்லை திமுகவின் அபரிமிதமான மக்கள் செல்வாக்கு, தேர்தல் வெற்றி குறித்து அமித்ஷா எழுப்பும் கேள்விகளுக்கு எடப்பாடி பழனிச்சாமியிடம் எந்த பதிலும் இல்லை என்பதுதான் முக்கியமான விஷயம். அதற்கு பதில் இல்லையென்றால், எடப்பாட்டியாருக்கு சிக்கல் தான் என்கிறது பாஜகவை அறிந்த வட்டாரங்கள்.
செங்கோட்டையன், ஓபிஎஸ்,டிடிவி தினகரன் என்ன முடிவில் இருக்கிறார்கள்.? அவர்களின் அடுத்த கட்ட முடிவு என்னவாக இருக்கும்.?
செங்கோட்டையனை பொறுத்தவரை பாஜக முடிவை அப்படியே ஏற்றுக்கொள்வார்.? அவர் அந்த மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை அவர் செங்கோட்டையனின் காய் நகர்த்தல்களில் பலன் பெற வாய்ப்பிருக்கிறதா.? என்று பார்ப்பதோடு, தனக்கு பாஜகவில் இருக்கும் சோர்ஸ்கள் வாயிலாக எடப்பாடியார் பற்றிய சில முக்கிய தகவல்களை பாஸ் செய்திருக்கிறார்.
டிடிவி தினகரன் ‘’வந்தால் மலை போனால் கயறு’’ என்ற முடிவில் லேசாக விஜய் பக்கம் சாய ஆரம்பித்து விட்டார். ஆனால் தவெக விஜய் தரப்பில் இருந்து பிடிமானம் கொடுக்கவில்லை என்கிறது விஜய் தரப்பு. மேலும் ஓபிஎஸ் டிடிவி இருவரையும் அமித்ஷா அழைத்தால்தான் உண்டு, இவர்கள் அமித்ஷாவை அழைத்து பேச முடியாது என்கின்றனர் தமிழக பாஜகவினர்.
அண்ணாமலை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா.?
தேசிய தலைமை நடவடிக்கை எடுக்கும் அந்த முடிவில் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி விஷயத்தில் அவருக்கு எதிராக இருப்பவர்கள் அனைவரும் அண்ணாமலை எதிர்ப்பு விஷயத்தில் எடப்படியார் கருத்துடன் ஒத்துப்போகிறார்கள். இதுதான் அரசியல் முரண்.
நயினார் தரப்பிலும், ஆடிட்டர் குருமூர்த்தி தரப்பில் இருந்தும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. நிர்மலா சீதாராமனும் அண்ணாமலை மீது நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருப்பதாகவும், இதன் பின்னணியிலும் ஆடிட்டர் குருமூர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக தமிழக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர், குருமூர்த்தியின் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஓரங்கட்டப்பட்டதற்கு பலி வாங்கும் படலமாக கூட இருக்கலாம்.! என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
தவெக பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி தராமல் இழுத்தடிப்பு செய்வதாக கூறப்படுகிறதே.?
தவெக பிரச்சாரத்திற்கு ஆளும் கட்சி, காவல்துறை வாயிலாக அனுமதிக்கு பல நிபந்தனைகளை போடுவதாகவும், அலைக்களிப்பு செய்வதாகவும், அதே அதிமுகவினருக்கு முழு ஆதரவு கொடுத்து அனுமதிப்பதாகவும், குற்றச்சாட்டு எழுகிறது. சமூக வலைத்தளங்களில் இது குறித்து தவெகவினர் பதிவிட்டு வருகின்றனர். இந்த பிரச்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு முற்றுப்புள்ளி வைப்பாரா.? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வாங்க.. சிங்காரம்.. டெல்லி சந்திப்பு குறித்த தகவல்களை பார்ப்போம்.


banner

Related posts

ரிதன்யா தற்கொலை வழக்கு – ஜாமீன்மனு மீது பதில் தர போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Admin

நடிகை திருமதி எம்.என். ராஜம் வீட்டிற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலின்

Ambalam News

ஜெயராஜ் பெனிக்ஸ் கொலை வழக்கு… அப்ரூவர் நாடகம் போடும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்…

Admin

Leave a Comment