இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கத்தில் வசித்து வரும் சிறுமி ஒருவருக்கு பிரவீன்குமார் என்ற இளைஞர் தொடர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் பலமுறை இளைஞர் பிரவீன் குமாரை கண்டித்தும், அவர்களை பொருட்படுத்தாமல், தொடர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை கொடுத்து அட்டகாசம் செய்து வந்துள்ளார்.
இளைஞரின் பாலியல் தொல்லை அதிகரித்ததால், அந்த சிறுமியின் தாயார் நெமிலி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனை தொடர்ந்து, அந்த புராரின் பேரில், விசாரணை செய்த போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் பிரவீன் குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பனப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related posts
Click to comment