தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து திமுக தொண்டர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. ‘’நார்மலாகத்தான் இருக்கிறார்’’ என்று கூறப்பட்டாலும் திமுக தொண்டர்கள் மத்தியில் ஒருவித இறுக்கம் இருக்கத்தான் செய்கிறது.

சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டபோது, “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் கலந்துகொண்ட பயனாளிகளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து கலைந்துரையாடியுள்ளார். இந்த ‘’உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி’’ புகைப்படங்களுடன் முதல்வரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடியே நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.