ஜாமீனில் தலைமறைவான மீராமிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு..



பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மீராமிதுன் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
அதன்பின்பு, இருவரும் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீனில் வெளிவந்த மீராமிதுன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜாராகாமல் தலைமறைவாகி விட்டார். இதன் காரணமாக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறார்.
மீரா மிதுன் டில்லியில் சுற்றி திரிவதாக அவரது தாய் மனு அளித்திருந்தார். மேலும் டில்லியில் உள்ள மகளை மீட்க கோரி மீரா மிதுன் தாய் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி, சமூக வலைதளத்தில், வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய இவ் வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


banner

Related posts

செங்கோட்டையன் அடுத்த மூவ்.. 9 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு.!?

Ambalam News

மதுரையில் தவெக மாநாடு.. தேதியை அறிவித்த விஜய்.!

Ambalam News

பாஜக அரசுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக வாபஸ் – எம்.பி. சசிகாந்த் செந்தில்

Ambalam News

Leave a Comment