ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முன்வந்திருக்கிறது. ஆக.15ம் தேதி அலஸ்காவில் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் நேரில் சந்தித்து பேச இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகள் இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் செயலில் இறங்கியிருக்கிறது
ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுதான் உக்ரைன். தற்போது அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு ரஷ்யாவுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. ஒரு கட்டத்தில் நேட்டோவில் இணைந்து, உக்ரைன் எல்லையில், அமெரிக்க படைகளை குவிக்க ஜெலன்ஸ்கி முயன்றார். இதன் காரணமாகவே தற்போது புதின், உக்ரைன் நேட்டோவிலிருந்து விலக வேண்டும், ரஷ்யா உக்ரைன் போரில், ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இழப்பீடாக சில பகுதிகளை உக்ரைன் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். உக்ரைன் அதிபர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே போர் நீடித்து வந்தது.
ட்ரம்ப் ‘’இந்த போரை தானே முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று உலக அரங்கில் மார்தட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்’’, பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதன்காரணமாகத்தான், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர தற்போது அமெரிக்கா முயன்று வருகிறது.
ஆனால் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவை தொர்ந்து பிரச்னையில் வைத்திருக்க வேண்டும், அதற்கு உக்ரைனை வைத்து ரஷ்யாவை சீண்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற நோக்கில், ட்ராம்ப் – புதின் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, இந்த பேச்சுவார்த்தை நடக்கக்கூடாது என்கிற சிந்தனையில் ஐரோப்பிய நாடுகள் காய்நகர்த்தி வருகின்றது.
புதின், டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இடம்பெற வேண்டும் என்பதுதான் ஐரோப்பிய ஆணைக்குழு அதாவது பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, பின்லாந்து ஆகிய நாடுகளின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்கு ஒருபோதும் ரஷ்ய அதிபர் புடின் ஒத்துக்கொள்ளமாட்டார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் முழு வீச்சில் ஆரம்பித்த ரஷ்யா உக்ரைன் போருக்குப் பின்னர் இதுவரை புதின் – ஜெலன்ஸ்கி இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. ஏற்கெனவே பலமுறை இருவரையும் சந்தித்து பேச வைக்க அமெரிக்கா, துருக்கி என பல நாடுகள் முயற்சித்துவிட்டன. இருவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில்தான். டிராம்ப் புதின் இருவரும் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தையில், ஜெலன்ஸ்கி பங்குபெறவேண்டும் என்ற சூழ்ச்சியான கருத்தை ஐரோப்பிய நாடுகள் முன்வைத்திருக்கின்றன. ரஷ்யாவுடன் நடத்தவிருக்கும் எந்த பேச்சுவார்த்தையாக இருந்தாலும் அதில் உக்ரைன் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில், ஜெலன்ஸ்கியையும் பங்கேற்க வைத்தால் பேச்சுவார்த்தையே நடக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. பேச்சுவார்த்தை நடக்காமல் போனால், உக்ரைனை வைத்து ரஷ்யாவை தொடர்ந்து சீண்டிகிக்கொண்டிருக்கலாம். இதுவே ஐரோப்பிய நாடுகளின் நோக்கம்
என்று சர்வதேச அரசியல் பார்வையாளர் விமர்சிக்கின்றனர்.
எது.? எப்படியோ.? நான்தான் போரை நிறுத்தினேன்.! என்று மார்தட்டிக்கொள்ள நினைக்கும் ட்ரம்பின் ஆசையில் மண் அள்ளிப்போட ஐரோப்பிய நாடுகள் அஸ்திவாரம் போட்டிருக்கிறது