கலைஞர் பல்கலை. மசோதா.. குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி


தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி உள்ளார்.
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் தாமதப்படுத்தி வந்த நிலையில், பல்வேறு விமர்சன்மங்கள் எழுந்து வந்தது.
பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்தது.
இது குறித்து குடியரசு தலைவர், உச்ச நீதிமன்றத்துக்கு குறிப்பு அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார். இது வரும் 19 ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், கலைஞர் பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா மீது சட்ட ஆலோசனையை பெறவும், குடியரசு தலைவரின் ஒப்புதலை கேட்பதற்காகவும், ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.


banner

Related posts

இப்படியாம்மா பண்ணுவ.!? சீட்டிங் வழக்கில் சிக்கிய ஷில்பா ஷெட்டி தனது நிறுவனத்தை மூடினார்

Ambalam News

‘’உங்களுடன் ஸ்டாலின்’’ முகாம்: மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம்: நில அளவை துறை உதவி வரைவாளர் திடீர் கைது

Ambalam News

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்.? அரசியல் கட்சிகள் மத்தியில் பரபர..!

Ambalam News

Leave a Comment