தவெக விஜய் மாநாட்டுக்கு சென்றவர் மர்ம மரணம்.? 6 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு – நடந்தது என்ன.?



மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போய் இருக்கிறார். இந்நிலையில் திருச்சியில் காணாமல் போனவர் 6 நாட்களுக்குப் பின்னர், அரவக்குறிச்சி பகுதியில் சாலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் கஸ்பா அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டிற்கு வேலூரில் இருந்து மதுரைக்கு தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார்.
பின்னர், மாநாடு முடிந்து திரும்பி வரும்போது, நள்ளிரவில் திருச்சி அருகே அனைவரும் ஹோட்டலில் உணவருந்தச் சென்றுள்ளனர். பின்னர் நண்பர்கள் அனைவரும் உணவருந்திவிட்டு கிளம்பும் போது மதனை தேடியுள்ளனர். ஆனால் மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரைத் தேடிப் பார்த்து கிடக்காத சூழலில், அவர் வேலூர் வந்துவிடுவார் என்ற எண்ணத்தில் வேலூர் திரும்பியுள்ளனர். ஆனால், காணாமல் போன மதன் வேலூர் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரது உறவினர்களிடம் விஷயத்தை கூறியுள்ளனர். மதனை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், மதனை காணவில்லை என சமூக வலைதளத்தில் பதிவிட்டு அவரது நண்பர்கள் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று அரவக்குறிச்சி பகுதியில் சாலையில் கடந்த 22 ஆம் தேதி விபத்தில் பலியான நிலையில் ஒருவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை மூலம் மதனின் உறவினர்கள் நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி சென்ற மதனின் உறவினர்கள் நண்பர்கள் இறந்தது மதன் தான் என்பதை அடையாளம் கண்டுள்ளனர்.
இன்று அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மதனின் உடலை பிரோதப் பரிசோதனை செய்யப்பட்டது. மதனின் உடலை உறவினர்கள் நண்பர்கள் வேலூருக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் திருச்சி வரை பயணித்து காணாமல் போனவர் அரவக்குறிச்சிக்கு ஏன் சென்றார்.? எப்படி மரணம் அடைந்தார்.? இந்த மரணம் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
விஜய்யின் தவெக மாநாட்டிற்கு சென்ற வேலூர் இளைஞர் மர்மமான முறையில் திருச்சி அருகே காணாமல் போய் அரவக்குறிச்சியில் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை தவெக மாநாட்டுக்கு சென்ற 5 நபர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


banner

Related posts

மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

Admin

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாறுகிறதா.? – காவல்துறை மீது தொடரும் நீதிமன்ற விமர்சனங்கள்..

Ambalam News

கோவில் காவலாளியை அடித்து கொன்ற போலீஸ் – 18 இடங்களில் கொடுங்காயம் அதிரவைக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

Admin

Leave a Comment