பத்திரிக்கை கொடுக்க சென்ற தவேக நிர்வாகி தாய் தந்தையுடன் பலி.. புதுமாப்பிள்ளைக்கு இப்படியா நடக்கணும்.? உறவினர்கள் வேதனை



கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நாராயணன். இவருக்கு சமீபத்தில் எளிமையாக திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், திருமண வரவேற்பு பத்திரிக்கை வைக்க சென்ற புதுமாப்பிள்ளை நாராயணன் மூன்றுபேருடன் சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் உறவினர்களை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பகண்டை கூட்டுச்சாலையை அடுத்த மாடாம்பூண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சென்னியம்மாள். இவர்களது மகன் நாராயணன். கள்ளக்குறிச்சி மாவட்ட தவெக நிர்வாகியாக இருந்து வந்தார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தை எளிமையாக நடத்திய நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.
இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி 4 ஆம் தேதி திருக்கோவிலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. தனது தாய் மற்றும் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தார். அதேபோல, இன்று ஒரே மோட்டார் சைக்கிளில் புதுமாப்பிள்ளை மற்றும் தாய் தந்தை ஆகிய 3 பேரும் சங்கராபுரம் பகுதியில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு மாடாம்பூண்டி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
பகண்டை கூட்டு சாலை அருகே வந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதையடுத்து படுகாயத்துடன் கிடந்த 3 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் பலனின்றி மூவரும் உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே புதுமாப்பிள்ளை நாராயணன் அவரது தாய் தந்தை ஆகியோர் விபத்தில் பலியான இந்த கொடுமையான துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


banner

Related posts

நகை திருட்டு புகார் அளித்தோம்… போலீசார் நடவடிக்கைகள் எங்களுக்குத் தெரியாது. – சி.பி.ஐ. விசாரணைக்குப்பின் நிகிதா பேட்டி..

Admin

திமுக அரசு ஊதாரித்தனமாக செலவு செய்து, வீண் ஜம்பம் அடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

Ambalam News

இறந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் – தவெக விஜய்

Ambalam News

Leave a Comment