கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்வதில் இந்து முன்னணி கட்சியினர் மற்றும் மற்ற விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தும் குழுவினர் மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டதால் ஏற்பட்டதால் போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 3 ஆயிரதிற்கும் அதிகமாக விநாயக்கர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி காவல்துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி பகுதியில் வழிபாட்டிற்காக மட்டும் மொத்தம் 150 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியினர் விநாயகர் சதுர்த்தி முடிந்தபின் விநாயகர் சிலைகள் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் கரைத்துவிடுவார்கள். ஊர்வலத்திற்கு முன்னதாக, அனைத்து சிலைகளும் மந்தவெளி பகுதிக்கு முதலில் கொண்டுவந்து நிறுத்துவார்கள். போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து தான் அணைக்கு வரிசையாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்படும்.
இந்த ஊர்வலத்தில் கள்ளக்குறிச்சியில் பல பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் சிலைகளில், ஊர்வலத்தில் முன்னணியில் செல்வது எந்த பகுதி மக்களுடைய சிலை என்பதில் வாக்குவாதமும் தகராறுகளும் வழக்கமாக நடக்கும்.
இந்த நிலையில், இந்தாண்டு விநாயகர் சிலையுடன் வந்த இந்து முன்னணி கட்சியினர், தங்களது சிலை ஊர்வலத்தில் முன்னணியில் செல்லவேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு மற்ற பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது. இதனால் அந்த பகுதியே கலவரமானது.
கலவரத்தை தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி மாதவன் தலைமையிலான போலீசார் கலவரத்தை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முடிவில் இந்து முன்னணி கட்சியின் சிலையை முதலில் கொண்டு செல்ல போலீசார் அனுமதித்தனர். இதனால் மற்ற பகுதிகளில் சிலை வைத்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கோமுகி அணையில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. எனினும் இரு தரப்பினரிடையே மோதல் போக்கு புகைந்து கொண்டிருப்பதால், மீண்டும் கலவரம் வரலாம் என்று காவல்துறையின் தலைமையகம் அனுப்பிய எச்சரிக்கை ரிப்போர்ட்டால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
Related posts
Click to comment