வரலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பதிற்கு ஆறுதல் கூறிய தொல்.திருமாவளவன்


சென்னை மாநகராட்சி 13 வது மண்டலம் 195 வது வட்டம், கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த தூய்மைப்பணியாளர் வரலட்சுமி இன்று அதிகாலை பணியின்போது மழைநீரில் ஏற்பட்ட மின் கசிவினால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தமிழக அரசு வரலட்சுமியின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை வழங்கியது. மேலும் அவரது உடல் அடக்கம் செய்யும் பொறுப்பை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏற்றுக்கொண்டார். மின்கசிவு விபத்தில் உயிரிழந்த வரலட்சுமியின் கணவருக்கு பணி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. மேலுமவர்களது குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்றுக்கொள்ளும் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டது.
தூய்மைப்பணியாளர் வரலட்சுமியின் மரணம் தொடர்பாக பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவவாவன் எம்.பி. இறந்துபோன வரலட்சுமியின் கணவர் குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறி, வரலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


banner

Related posts

ஒன்றிய அரசைக் கண்டித்து 4 வது நாளாக எம்.பி. சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டம் – நேரில் சந்தித்து நலம் விசாரித்த திமுக எம்.பி. கனிமொழி

Ambalam News

பீகார் தேர்தல் : நிதிஷ் – தேஜஸ்விக்கு எதிராகக் களமிறங்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி டெபாசிட் வாங்குமா.?

Ambalam News

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. சுந்தரேசனுக்கு திடீர் நெஞ்சுவலி

Admin

Leave a Comment