தமிழக டிஜிபியாக பதவி வகித்து வந்த, சங்கர் ஜிவால் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், தமிழக அரசு அவரை தீயணைப்பு ஆணைய தலைவராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீராஜ்குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். சங்கர் ஜிவால் நாள மறுநாள் ஆகஸ்ட் 31 அன்று பணி ஓய்வு பெற இருக்கிறார். அவர் பணி ஓய்வு பெரும் முன்னரே புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு புதிய ஆணையம் ஒன்றை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அடிக்கடி பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தீவிபத்துகள் வெடி விபத்துகள் பொருள் இழப்புகளை மட்டுமின்றி ஏராளமான உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
இது போன்ற விபத்துகள் தீ விபத்துகளை முற்றிலுமாக தடுப்பதற்கு தேவையான வழிமுறைகளை இந்த ஆணையம் வழங்கும். அந்த ஆலோசனைகளின் அடிப்படையில் புதிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயங்கும். காலத்திற்கு ஏற்றவாறு மேம்பட்ட நவீன உபகரங்கள், கருவிகள் வாங்குவது தொடர்பாகவும் இந்த ஆணையம் ஆலோசனைகள் வழங்கும். இந்த ஆணையத்தின் தலைவராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையில் 35 ஆண்டுகாலம் சிறப்பாக பணிபுரிந்துள்ள சங்கர் ஜிவாலின் அனுபவத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையில், அவரை தீயணைப்பு ஆணைய தலைவராக நியமிக்கும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.
Related posts
Click to comment