கடலூர் ரயில் தண்டவாளத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 மாணவர்கள் படுகாயம்..


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற பள்ளிவாகனம் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் வாகனத்தின் உள்ளே இருந்த பள்ளி மாணவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து வாகனத்தை தண்டவாளத்தில் தூக்கி அகற்றினர்.
பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயமடைந்த மாணவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த மானவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அறிந்த மானவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.
தண்டவாளத்தில் பள்ளிவாகனம் கவிழ்ந்த சமயத்தில் ரயில்கள் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மாதம் கடலூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் அண்ணன், தங்கை உள்ளிட்ட 3 பள்ளி குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


banner

Related posts

6 மாதங்களில் 769 வழக்குகளில் 1133 பேருக்கு சிறை – தென்மண்டல ஐ.ஜி., பிரேம்குமார் ஆனந்த் சின்ஹா அதிரடி

Ambalam News

அடித்து ஆடும் செங்கோட்டையன்.. ஆதரவுக்கரம் நீட்டும் ஓபிஎஸ் – டிடிவி. தினகரன் – சசிகலா..

Ambalam News

தமிழகத்தின் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்? விரைவில் அறிவிப்பு..

Ambalam News

Leave a Comment