கரூரில் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை காவல்துறை கைது செய்துள்ளது. கரூர் தந்தோன்றிமலை ஊரணிமேட்டு பகுதியில் விபச்சார தொழில் நடப்பதாக கரூர் மாவட்ட விபச்சார தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. விபச்சாரத்தடுப்பு போலீசார் மூன்று பெண் காவலர்களுடன் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். சந்தேகத்திற்கு இடமான ஒரு வீட்டை போலீசார் நோட்டமிட்ட நிலையில், அந்த வீட்டின் முன் நின்றிருந்த பெண் ஒருவர் தன்னை யாரோ தொடர்ந்து காண்காணிப்பதாக அறிந்து கொண்டு வீட்டிற்குள் ஓடியுள்ளார். இதயடுத்து போலீசார் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வீட்டில் விபச்சாரம் நடப்பதை ஒப்புக்கொண்ட அந்த பெண், எதிர்விட்டில் வசிக்கும் பாஜக நிர்வாகியான ரகுபதி இந்த வீட்டில் தன்னை போன்றவர்களை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் தான் டெக்ஸ்டைலில் வேலை பார்த்து வருவதாகவும் வறுமை காரணமாக விபச்சாரத்தொழில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.
ரகுபதி கரூர் மாவட்ட பாஜக உள்ளாட்சி குழு அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். தன்னுடைய வீட்டிற்கு எதிரில் உள்ள வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரத்தொழில் நடத்தி வந்திருக்கிறார். என்பதை அறிந்த விபச்சாரத் தடுப்பு போலீசார், பாஜக நிர்வாகி ரகுபதி மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஒரு பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கரூர் மாவட்ட பாஜக உள்ளாட்சி குழு அமைப்பாளராக உள்ள ரகுபதியை போலீசார் கைது செய்தனர். பாஜக நிர்வாகி ரகுபதி உள்ளிட்ட 3 பேரை தாந்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்
: கரூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக புகாரில் பாஜக நிர்வாகியை காவல்துறை கைது செய்தது. கரூர் மாவட்ட பாஜக உள்ளாட்சி குழு அமைப்பாளராக உள்ள ரகுபதியை போலீசார் கைது செய்தனர். பாஜக நிர்வாகி ரகுபதி உள்ளிட்ட 3 பேரை தாந்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்