கேப்டன் பிரபாகரன் திரைப்படம் 800 திரையரங்குகளில் ரீரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்


வெற்றி நாயகன் புரட்சி கலைஞர் விஜயகாந்தின் 100 வது திரைப்படம் கேப்டன் பிரபாகரன் வீரப்பனை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 1991 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. ஆர்.கே. செல்வமணி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் மன்சூர் அலிகான் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். சரத்குமார், ரூபினி, லிவிங்ஸ்டன், ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தார்கள். அன்றைய காலகட்டத்தில் விஜய்காந்த் நடிப்பில் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவான கேப்டன் பிரபாகரன் திரையரங்குகளில் 300 நாட்களுக்கும் மேல் ஓடி அதிபிரம்மாண்ட வெற்றிப் படமாக வசூலை குவித்தது.
அவரது மறைவுக்கு பின்னரும் கூட AI தொழில்நுட்பம் வாயிலாக அவர் G.O.A.T திரைப்படத்தில் நடிக்க வைக்கப்பட்டார். தமிழ் திரையுலகின் அசைக்கமுடியாத இடத்தை பிடித்த விஜயகாந்த் ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள், டெக்னிசியன்கள், போன்றவர்களால் கொண்டாடப்பட்டவர்.
பெரும் கலைஞனான விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் இன்று (ஆகஸ்ட் 22) 800 கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


banner

Related posts

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது

Admin

விருதுநகர் வெம்பக்கோட்டை வெடிவிபத்து : இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் காயம் அடைந்தவருக்கு 1 லட்சம் நிவாரண தொகை – மு.க. ஸ்டாலின்

Ambalam News

தமிழகத்தின் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்? விரைவில் அறிவிப்பு..

Ambalam News

Leave a Comment