இரயில் பயணிகளை திடீரென தாக்கிய பீகார் இளைஞர் – கோவையை சேர்ந்த முதியவர் பரிதாப மரணம்..


திருநெல்வேலி இரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிககளை, பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் காரணமின்றி, திடீரென இரும்பு கம்பியால் தாக்கி இருக்கிறார். இதனால் அச்சமடைந்த பயணிகள் ஓடியுள்ளனர்.
4 வது நடைமேடையில் பயணிகள் காத்திருந்தபோது, கையில் இரும்பு கம்பியுடன் வந்த பீகாரை சேர்ந்த இளைஞர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கி இருக்கிறார். இந்த திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் கோவையை சேர்ந்த தங்கப்பன் என்ற 72 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார
இந்த சம்பவத்தை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். இதன் பின்னர் தச்சநல்லூர் இரயில் நிலையத்தில், அதே இளைஞர் இரும்புக் கம்பியுடன் நிற்பதை கண்டறிந்து, கைது செய்தனர். கைதான இளைஞர் தான் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், தனது பெயர் சூரஜ் என்றும் தெரிவித்துள்ளார். ஏன்.? இந்த இளைஞன் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டான் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.


banner

Related posts

சொன்னதை செய்த இ.பி.எஸ்.? அடித்து நொறுக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்.!

Ambalam News

மகளின் காதலனை ஆணவக்கொலை செய்த தாய்.? மயிலாடுதுறையில் பயங்கரம்..

Ambalam News

இபிஎஸ் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டு, அதிமுகவை ஒன்றிணைக்க தொண்டர்கள் கோஷம்..

Ambalam News

Leave a Comment