விஜய்க்கு செக் வைக்கும் மு.க. ஸ்டாலின் | சி. பி. ஐ. விசாரணை உத்தரவுக்கு எதிராக விரைவில் மேல்முறையீடு.?


கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகியின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.. சிபிஐ விசாரணை நேர்மையாக நடக்காது.முக்கியமாக விஜய் தரப்பு அஜய் ரஸ்தோகி தரப்பை சந்திப்பது விசாரணையின் போக்கை பாதிக்கும் என்று தமிழக அரசு கருதுவதாக கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு இதை விசாரிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் சிபிஐ வழக்கின் விசாரணை கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது குறித்து உரிய சட்ட ஆலோசனை பெற்று நிச்சயமாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இந்த கருத்து தமிழ்நாட்டு மக்களுக்கே வேதனைக்குரிய ஒன்றாக அமைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாங்கள் மனுத் தாக்கல் செய்யவே இல்லை என உயிரிந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வாதம் வைத்து உள்ளனர். இதனால் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு பெரிய அளவில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

தங்களை பிரிந்துச் சென்ற, குடும்பத்தை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு குடும்பத்திற்கு தொடர்பில்லாத பன்னீர்செல்வம் பணத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாக உயிரிழந்த சிறுவனின் தாயார் சர்மிளா கூறியிருந்தார், அதேபோல தன்னை ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டதாக செல்வராஜ் என்பவரும் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் காணொளியில் செல்வராஜ் ஆஜராகி, தன்னை ஏமாற்றி கையொப்பம் பெற்றுவிட்டதாக செல்வராஜ் அந்த காணொளியில் தன்னுடைய கருத்தை பதிவு செய்து உள்ளார்.

இந்த வழக்கில்பல்வேறு முறைகேடு நடந்துள்ளதால் இதை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அதிகாரிகள் இருக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அதிருப்தி அடைந்த தமிழக அரசு விரைவில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.


banner

Related posts

ரிதன்யா தற்கொலை வழக்கு – ஜாமீன்மனு மீது பதில் தர போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Admin

திமுக வுக்கு அடுத்த தலைவலி ஸ்டார்ட்.. வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மர்ம மரணம்..

Ambalam News

”கூலிப்” புகையிலைக்காக சினிமா நடிகர் கொலை.. தொடரும் இரயில் நிலைய கொலைகள்..? பகீர் சம்பவம்..

Ambalam News

Leave a Comment