தமிழ்நாட்டில் ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.! தமிழ்நாடு அரசு உத்தரவு



தமிழ்நாடு அரசு நேற்று ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் செயலாளர் வெங்கட பிரியா உள்ளிட்ட ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை அரசு சிறப்பு செயலாளர் சஜ்ஜன் சிங் சவான், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியம், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை அரசு கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் செயலாளர் வெங்கட பிரியா, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலத்துறை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநராக சரண்யா அரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன செயல் அலுவலராக ஸ்வேதா சுமன் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக எஸ். பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு துணைச் செயலாளராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமிக்கப்பட்டுள்ளார்.


banner

Related posts

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. சுந்தரேசனுக்கு திடீர் நெஞ்சுவலி

Admin

பொய் புகார்.? நிகிதா மீது சிபிஐ சந்தேகம் – அஜீத்குமார் வழக்கு

Ambalam News

மதுரையில் தவெக மாநாடு.. தேதியை அறிவித்த விஜய்.!

Ambalam News

Leave a Comment