தமிழக வெற்றிக்கழக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட அளவு கந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 31 பேர் பலியாகி உள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்களின் உறவினர்கள் கதறும் சத்தம் நெஞ்சை பதற வைக்கிறது. கரூர் மாநகரம் முழுவதும் மமரண ஓலமாக கிடக்கிறது.

தவெக பொதுக்கூட்டத்திற்கு குறித்த நேரத்தில் வராமல் மிக தாமதமாக வந்ததாலும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் இந்த அசாம்பாவித சம்பவம்நடந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகளை முன்னின்று செய்து வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி நாமக்கல் சேலம் மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் அதிகாரிகள் அமைச்சர்கள் கரூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நாளை முதலமைச்சர் கரூர் செல்கிறார்.

தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா மருத்துவத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி செய்துள்ளார்.
கரூர் முழுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விஜய்யின் மாநாட்டிற்கு வருகை தந்து கூட்ட நெரிலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளது