திருச்சி (கிழக்கு) தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய் | சிலிண்டருக்கு மானியம் தருவேன் என்று சொன்னீங்களே என்னாச்சு? பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி..


தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் கடந்த 30 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த கையோடு பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

தான் போட்டியிடுவதாக கூறியிருந்த இரண்டாவது தொகுதியான திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று விஜய் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பாலக்​கரை பகு​தி​யில் உள்ள மாநக​ராட்சி 2-வது மண்டல அலு​வலகத்தில் தேர்​தல் நடத்​தும் அலு​வலர் முத்து முருகேச​பாண்​டி​யிடம் வேட்​புமனு தாக்​கல் செய்துள்ளார்.

வேட்பு மனு தாக்கல் நடைமுறைகளை முடித்துவிட்டு, திருச்சி பூக்கடையில் பிரசாரம் செய்ய உள்ளார். 500 நிர்வாகிகள் மட்டுமே வருவார்கள் என விஜய் கட்சியின் தேர்தல் கமிஷனிடம் தெரிவித்து இருந்தாலும் போலீசார் கூடுதல் பாதுகாப்பை வழங்கியிருக்கிறார்கள்.

திருச்சியில் பிரச்சாரம் செய்த விஜய், தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்றும், திருமணம் ஆகும் பெண்களுக்கு 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை வழங்கப்படும் என்று பேசினார்.

நகராட்சி துறையில் ஊழல் நகராட்சி துறையில் ஊழல் நடந்துள்ளது. நகராட்சி துறையில் தகுதியானோருக்கு வேலை கிடைக்காமல் லஞ்சம் பெற்ற அமைச்சர் ஒருவர் திருச்சியில் உள்ளார். ஏற்கனவே ஸ்டாலின் சார் வரி பற்றி பேசினோம். ஆனால் அதுகுறித்து யாரும் வாய் திறக்கவில்லை.
இந்த தேர்தலில் மிகப்பெரிய ஆயுதமாக ஜனநாயகன் படம் மாறிவிடும் என்பதால் அதை சூழ்ச்சி செய்து தடுத்துள்ளனர். கரூர் சம்பவம் ஒரு சூழ்ச்சி, ஜனநாயகன் படம் வெளியிடாமல் இருப்பது ஒரு கூட்டு சூழ்ச்சி என்று விஜய் பேசினார்.

மேலும், கேஸ் தட்டுப்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என விஜய் பேசினார். கேஸ் சிலிண்டர்கள் இல்லாததால் மக்கள் சிரமப்படுகிறார்கள். முன்னரே உஷாராக இருந்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது.

முறையான கழிப்பறை வசதி இல்லாததால் தான் தூத்துக்குடியில் 12 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். இதற்காகதான் தவெக முதலிலேயே சொன்னது அடிப்படை வசதிகளை முறையாக செய்வோம் என்று.. 100 சதவீதம் இந்த விஜய்யை நம்பலாம்.

திருச்சியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் .. கேஸ் பிரச்சினை தீர்ந்துவிட்டதா என கேள்வி எழுப்பினார். மேலும், உங்க வீட்டில் எதாவது ரெய்டு நடந்தால் உடனே டெல்லிக்கு செல்லும் நீங்கள்… கேஸ் பிரச்சினைக்கு எப்பவாது டெல்லி சென்று இருக்கீங்களா? சிஎம் சார்.. சிலிண்டருக்கு மானியம் தருவேன் என சொன்னீங்களே.? செய்தீர்களா.? என விஜய் பேசினார்.

கேஸ் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிட்டதா?.. கேஸ் புக் செய்தால் உடனடியாக கிடைக்குதா?.. அவங்களாவது கொஞ்சம் முன்னாடியே இதனை கவனித்து இருக்கலாம்.. இவங்களாவது இத கொஞ்சம் பாத்து இருக்கலாம். ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து எதுவும் பண்ணவில்லை என விஜய் பேசினார்.

இந்நிலையில், திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்ய பரப்புரை வாகனத்தில் சென்ற நிலையில், அவரது வாகனத்தை விதிகளை மீறி தவெக தொண்டர்கள் பின் தொடர்ந்தனர். தவெக தலைமை விஜய் வாகனத்தை பின் தொடர வேண்டாம் என்று கூறியிருந்த போதிலும் மற்ற வாகனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பைக்கில் இளைஞர்கள் பின் தொடந்தனர். இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.


banner

Related posts

குண்டர் சட்டத்தில் கைதான பிரபல நடிகருக்கு சென்னைக்குள் நுழைய போலீஸ் தடை

Ambalam News

பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Ambalam News

தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 – தேமுதிக அறிவிப்பு

Ambalam News

Leave a Comment