பியூஸ் கோயலிடம் கறார் காட்டிய அண்ணாமலை.!? தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா.? பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் தவிப்பு..


தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, தவெக என அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளன. சட்டமன்ற தேர்தலை நெருங்கிவிட்ட நிலையில், இந்த கட்சிகள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அதிமுக திமுகவின் கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மட்டும் இதுவரை முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றுவரை பஜாக வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாமல் உட்கட்சி விவகாரத்தில் சிக்கி தவிக்கிறது என்று கூறப்படுகிறது. குறிபாக அண்ணாமலையை மையப்படுத்தி பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக வேட்பாளர் பட்டியலை அறிவிக்க முடியாமல் பாஜக தவிப்பதாக கூறப்படுகிறது. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இந்த முறை தேர்தலில் போட்டியிடாமல் இருக்க முடிவு செய்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் பாஜக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாஜக சார்பில், எந்த தொகுதியில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது குறித்து நீண்ட நாட்களாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் தமிழகம் வந்து பல கட்ட ஆலோசனைகளை நடத்திய பின்னரும், வேட்பாளர் பட்டியல் வெளியிட தொடர்ந்து தாமதமாகி வருகிறது. சமீபத்தில் சென்னை நகரில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அந்த பட்டியல் கட்சி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டதாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இருப்பினும் கட்சி மேலிடம் இதுவரை வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யாமல் இருப்பதற்கு அண்ணாமலையின் அதிரடி முடிவே காரணம் என்று கூறப்படுகிறது.

அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும், அந்த தொகுதிக்காக அவரது ஆதரவாளர்கள் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் கட்சி மேலிடம் அவரை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் இடையே நீண்ட நேர ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

தமிழக பாஜக அவரை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்திய நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடப்போவாதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுவதால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவி வருகிறது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட வேண்டுமென அண்ணாம்லையிடம் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் பிடிவாதமாக பேசியபோதும், அதற்கு அண்ணாமலை ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பியூஸ் கோயலிடம் தேர்தலில் போட்டியிட முடியாது. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மட்டுமே செய்ய முடியும் என அண்ணாமலை உறுதியாக தெரிவித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து விடிய விடிய ஆலோசனைகள் நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அண்ணாமலை இந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குப் பதிலாக, பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்வேன் என்று அவர் கட்சி மேலிடத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக பாஜகவின் முக்கிய தலைவரான அண்ணாமலை எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு கட்சி மேலிடத்திற்கு மட்டுமின்றி, தொண்டர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் வேட்பாளராக தேர்தலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ஆதரவாளர்கள் இந்த தகவலை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் குறைந்து வரும் நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு எப்போது வெளியாகும், வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறுமா? அண்ணாமலை கேட்ட தொகுதியை பாஜக மேலிடம் ஒதுக்குமா.?அல்லது அண்ணாமலை போட்டியிடாமல் இருக்கப்போகிறாரா.? என்ற கேள்விகள் தற்போது பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.


banner

Related posts

திணறியது திருச்சி.!! திருச்சி தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு கிளம்பிய விஜய்.!

Ambalam News

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது

Admin

ஏதே..? விஜய் தலைமையில் மூணாவது கூட்டணியா.!? அட என்னய்யா சொல்ற.?

Ambalam News

Leave a Comment