திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் – உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பு


திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், துாணிலும் தீபத்தை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த மனுக்களை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அப்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூண் இருந்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் 1961 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் கோவில் தேவஸ்தானம் வெளியிட்ட புத்தகத்தில், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதாக குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறி அதற்கான ஆவணத்தை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தீபம் ஏற்றுவதம் மூலம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவது என்ற வாதம் நகைப்புக்குரியது. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூண் தர்காவுக்கு சொந்தமானது என்பதை ஏற்க இயலாது. தீப விவகாரத்தில் மதுரை மாவட்ட நிர்வாகம் தேவையில்லாத பிரச்னையை உருவாக்கி உள்ளது என்று கூறிய நீதிபதிகள்
திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீபம் ஏற்ற தனிநீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், ஒவ்வொரு கார்த்திகையின் போதும் மலை உச்சியின் மீது தீபம் ஏற்ற
வேண்டுமென நீதீபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.


banner

Related posts

12 கிலோ ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா கடத்தல்… இருவர் கைது… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..

Ambalam News

ஜனநாயகன் பட சென்சார் சான்றிதழ் விவகாரம் | நீதிமன்றத்தை நாடிய படக்குழு – “யார் தடுக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்” – செங்கோட்டையன்..

Ambalam News

நண்பர்களால் தாக்கப்பட்ட எஸ்.ஐ ராஜாராமன் உயிரிழப்பு

Admin

Leave a Comment