கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொல்ல, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி. வேணுகோபால் இன்று கரூர் வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்பேரில் கேசி வேணுகோபால் இன்று கரூருக்கு வருவதாக கூறப்படுகிறது.
கரூரில் வேலுசாமிபுரத்தில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த தவெக தலைவர் விஜய்யுன் பிரச்சாரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கிகுழந்தைகள் பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் திமுகவும் தவெகவும் ஒருவர்மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த சம்பவத்,தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி முதல் பல்வேறு மாநில தலைவர்களும் இரங்கல் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
இதை தொடர்ந்து காங்கிரஸ் எம்பியும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியும் தன்னுடைய இரங்கல் பதிவில், “கரூரில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து , ராகுல் காந்தி நேற்று முன்தினமே முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முழு விபரங்களையும் ராகுல் காந்தி கேட்டறிந்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பதிவிலும் தெரிவித்திருந்தார். கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்றும் வருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தார்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில்,நேற்றைய தினம் தவெக தலைவர் விஜய்க்கும் போன் செய்து ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.. இருவரும் சுமார் 15 நிமிடங்கள் போனில் பேசியதாக தெரிகிறது. கரூரில் என்ன நடந்தது என்று கேட்டறிந்த ராகுல்காந்தி, விஜய்க்கு ஆறுதல் சொல்லி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த ராகுல்காந்தி அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது. ஆனால், ராகுல் காந்தி விஜய்யிடம் போனில் பேசியிருப்பது, இரு விதமான விவாதங்களை அரசியல் களத்தில் கிளப்பி விட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக தமிழக பாஜக, விஜய்க்கு அழுத்தம் கொடுக்க ராகுல் காந்தி மறைமுக முயற்சி எடுத்து வருகிறார்.? அதை விரைவில் அம்பலப்படுத்துவோம் என்றும் தன்னுடைய அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
மற்றொருபுறம், அரசியல் ரீதியான விஷயங்களையும் ராகுல்-விஜய் இருவரும் பேசியதாக சொல்கிறார்கள்.. அதாவது, கரூர் சம்பவம் குறித்து ராகுல் கேட்டறிந்ததுமே, தான் மேற்கொள்ளவிருக்கும் பிரச்சார திட்டங்கள் குறித்து ராகுலிடம் விஜய் சொன்னதுடன், தன்னுடைய பிரச்சாரத்துக்கும், அரசியல் ரீதியிலான நிகழ்வுகளுக்கும் திமுக அரசு தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்து வருவதாகவும் செந்தில் பாலாஜி குறித்தும் சில விஷயங்களை எடுத்து கூறினாராம் கூறினாராம். விஜய் சொன்ன அனைத்து விஷயங்களையும் பொறுமையாக கேட்டுக் கொண்டாராம்.
ஏற்கனவே விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம் என்று ராகுலிடம், தமிழக காங்கிரஸின் சில தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், விஜய்யுடன் ராகுல் போனில் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. தவெக காங்கிரஸ் கூட்டணி குறித்து எதுவும் பேசப்பட்டதா.? என்ற விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
இந்நிலையில், தான் ராகுல்காந்தியின் அறிவுறுத்தளின்படி கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொல்ல, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இன்று கரூருக்கு வருகிறார். இந்த கரூர் பயணத்தின்போது, கேசி வேணுகோபாலுடன் மாநில காங்கிரஸ் தலைவர்கள் உடன் செல்வார்கள் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.