அதிமுகவை ஆர்.எஸ்.எஸ். வழி நடத்துவதில் என்ன தவறு.!? – எல். முருகன். நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை” – அதிமுக செல்லூர் ராஜு பதிலடி.!



அதிமுகவை பாஜக மிரட்டி அடிபணிய வைத்து கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்ட நிலையில், நடிகர் விஜய் அதிமுக பாஜக உறவு குறித்து பேசிய கருத்துகள் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. பாஜகவும் அதிமுகவும் மாறிமாறி அறிக்கைவிட்டு வருகிறது.
பாஜகவை போல் அதிமுகவையும் ஆர்.எஸ்.எஸ் வழி நடத்துவதாக தவெக தலைவர் விஜய் பேசி இருந்தார். அதுகுறித்த கேள்விக்கு நேற்று செய்தியாளர்களுக்கு பதில் அளித்த பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “ஆர்.எஸ்.எஸ் என்பது சமூக சேவைக்கான இயக்கம்.
நூற்றாண்டு கண்ட இந்த இயக்கம் குறித்து ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் போன்றோர்கள் பேசியுள்ளனர். அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் விருந்தினர்களாகவும் கலந்து கொண்டுள்ளனர். அரசியல் கட்சிகளை நல்வழிப்படுத்தும் அனைத்து கொள்கைகளையும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட இயக்கம் அதிமுகவை வழிநடத்தினால் என்ன தவறு? என்று கேட்டதோடு, முதலில் விஜய்தான் ஆர்.எஸ்.எஸ்-இல் சேர்ந்து அரசியல் தெளிவு பெற வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் மூலம் விஜய் அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்த பேச்சை அதிமுகவினர் ரசிக்கவில்லை என்று பேசப்பட்டு வந்த நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ “நாங்கள் யாருக்கும் அடிமையும் இல்லை.. எஜமானரும் இல்லை” என தெரிவித்துள்ளார். “அதிமுக யாருக்கும் அடிமையும் இல்லை, எஜமானரும் இல்லை. எங்களுக்கும் யாரும் அடிமையும் அல்ல, நாங்களும் யாருக்கும் எஜமானரும் அல்ல. எங்கள் கட்சிக்கு என்று தனி கொள்கை உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் வழிப்படிதான் எடப்பாடி பழனிசாமியும் நடக்கிறார். அதிமுக கொள்கையில் இருந்து என்றும் வழுவாது என எல்லோருக்கும் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.


banner

Related posts

மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்..

Admin

நீங்கள் பதவி வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா? கவர்னருக்கு கனிமொழி எம்.பி. கேள்வி

Ambalam News

ரூ.300 கோடிக்கு ட்ரோன் ஆர்டர் கொடுத்த இந்திய ராணுவம்! சூடு பிடிக்கும் ட்ரோன் சந்தை

Admin

Leave a Comment