தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை நடைபயிற்சியின் போது ஓபிஎஸ் சந்தித்த நிலையில், மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு திடீரென சென்ற ஓ.பன்னீர்செல்வம் முதல்வரை சந்தித்தார். ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வீட்டு வாசல் வரை வந்து வரவேற்றார். முன்னதாக, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று காலை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்திருந்தார்
உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு
‘’ நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி ‘’! என்று பிரேமலதா விஜயகாந்த் உடனான சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் உடனான சந்திப்பு குறித்த புகைப்படத்தைப் அவரது வலைதள பக்கத்தில் பகிர்ந்து, ‘’ உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி! ‘’ என்று முதல்வர் ஸ்டாலின் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உடல்நலம் குறித்து நலம் விசாரிக்க நடந்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் ஓபிஎஸ் இருவரின் முதல்வருடனான சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related posts
Click to comment