5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.. அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க பறக்கும் படை தயார்..


2026 தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 4 ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான மனு தாக்கல் மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 6 ம் தேதி முடிவடையும் என்றும் வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7 இம்தேதி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார்.

அதேபோல புதுச்சேரியில் நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் 9 தேதி நடைபெறும் என்றும், அசாமில் ஏப்ரல் 9 ஆம் தேதியும், கேரளாவில் ஏப்ரல் 9 ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தல் முடிவடையும் தருவாயில் மே 4 இம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தபட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க பறக்கும் படை தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களில் முதல்வரின் படங்கள் அரசு திட்டங்கள் தொடர்பான படங்கள் அகற்றப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவது வாகன சோதனைகள் தொடங்கியது.


banner

Related posts

விஜய்க்கு எதிராக களமிறங்குகிறாரா.? சிவகார்த்திகேயன் | ஜனநாயகன் V/S பராசக்தி

Ambalam News

காஞ்சியில் விதிகளை மீறி வண்டல் மண் திருட்டு – விவசாயிகள் குற்றச்சாட்டு..

Ambalam News

5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..

Ambalam News

Leave a Comment