கேரளாவில் பெண் பயணி ஒருவர் பேருந்தில் தனக்கு நேர்ந்த பாலியல் அநாகரீகத்தை வீடியோ காட்சிகளாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். பேருந்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காட்சிப்படுத்தப்பட்ட நபர் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் பரவி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சம்பவத்தன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பெண் ஒருவர் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடன் பயணித்த 42 வயதுடைய நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த இளம்பெண் அதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த நபர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இணையதளத்தில் இச்சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது.
பாலியல் சீண்டலுக்குள்ளான பெண் தனது அலைபேசியில் எடுத்த வீடியோவில் அந்த பெண் எவ்வித பதட்டமோ தடுக்கும் நோக்கமோ இன்றி இந்த வீடியோவை எடுத்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குற்றச் சம்பவம் என்று அவர் அறிந்திருந்த போதும் ஒட்டுநரிடமோ நடத்துநரிடமோ காவல்துறையினரிடமோ புகார் தெரிவிக்காதாது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
காவல்துறையினர், தீபக் என்ற நபர் வீட்டில் தூங்கி கொண்டிருந்ததாகவும், குடும்பத்தார் கதவை தட்டியும் வெகு நேரமாக கதவை திறக்காததால், சந்தேகமடைந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் அவர் மின்விசிறியில் தூக்கிட்டபடி கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
தீபக் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பணிக்கு செல்லும் பொருட்டு வெள்ளிக்கிழமை கண்ணூருக்கு சென்றிருந்ததாகவும், மேலும், தீபக் ஒரு அப்பாவி என்றும், இந்த வீடியோவால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே விபரீத முடிவு எடுத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அ

