பாஜக தொகுதியான மயிலாப்பூரில் பிரச்சாரத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி.! – மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டி.?



2026 சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக, தமாகா உட்பட இதர கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தம் 61 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அந்தவகையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜகவுக்கு 27 தொகுதிகள், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், தமாகவுக்கு 5 தொகுதிகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்தத் தொகுதிகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அரந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் தனி, மதுரை தெற்கு ஆகிய 27 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளத
27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை இன்று மயிலாப்பூரில் தொடங்கினார். இதில், அவர் பிரச்சாரம் முடிந்து புறப்படும் தருவாயில், பிரச்சார வாகனத்தில் பாஜக நிர்வாகியும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் உடன் இருந்தார்.
இவரும் பிரச்சார வாகனத்தில் நின்றபடியே சிறிது தூரம் வரை சென்றனர். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு மயிலாப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜக தலைமை 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடாத சூழலில், மயிலாப்பூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமியுடன் பிரச்சார வாகனத்தில் தமிழிசையும் மக்களைச் சந்தித்துள்ளார் இதன் காரணமாக அவர்தான் மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளரா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.


banner

Related posts

தலைமைச் செயலாளர் முருகானந்தம் உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் பணியிட மாற்றம்.. புதிய தலைமைச் செயலாளராக சாய்குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு..

Ambalam News

அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி

Admin

இப்படியாம்மா பண்ணுவ.!? சீட்டிங் வழக்கில் சிக்கிய ஷில்பா ஷெட்டி தனது நிறுவனத்தை மூடினார்

Ambalam News

Leave a Comment