அந்தரங்க உறுப்பை படம் பிடித்து அனுப்பி பாலியல் தொல்லை – ஆசிரியர் போக்ஸோவில் கைது


ஆசிரியர்கள் சிலர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கைதாகி வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஆரிரியர் ஒருவர் மாணவனுக்கு தனது அந்தரங்க உறுப்பை படம் பிடித்து அனுப்பி, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவன் அதிகநேரம் செல்போனில் செலவிடுவதை பார்த்த அவனது தந்தை அவனது செல்போனை ஆராய்ந்தபோது, அதில் மாணவன் பயிலும் பள்ளியின் ஆசிரிய ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை படம் பிடித்து அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்து, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் மங்கலம் சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அந்த சிறுவன் அதிகப்படியாக செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனிடம் கேட்டனர். அப்போது அந்த சிறுவன் தனது கணித ஆசிரியரான ஆதீஸ் என்பவரிடம் பேசுவதாக தெரிவித்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுவனின் தந்தை சிறுவனுடைய செல்போனை சோதனை செய்தார். அதில் கணித ஆசிரியர் ஆதீஸ், தனது அந்தரங்க உறுப்பை படம் பிடித்து இன்ஸ்டாகிராம் மூலம் சிறுவனுக்கு அனுப்பியது தெரிய வந்திருக்கிறது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை, திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ஆதீஸை பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் ஆதீஸ் சிறுவனுக்கு அந்தரங்க உறுப்பை படம் பிடித்து இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியதை ஒப்புக்கொண்டார். மேலும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் ஆதீசை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


banner

Related posts

திருவண்ணாமலையில் 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வன பகுதியாக அறிவிக்க நீதிமன்றத்தில் சிறப்பு குழு பரிந்துரை..

Ambalam News

திருச்சி அரசு மருத்துவமனை – போதுமான வசதிகள் இல்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு

Admin

சூளைமேடு கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்.. வாய் கட்டப்பட்டிருந்ததாக மாநகராட்சி கட்டுக்கதை.!?

Ambalam News

Leave a Comment