உத்தரகாசியில் மேகவெடிப்பு, திடீர் வெள்ளம், மண்சரிவு, ராணுவ வீரர்கள் 11 பேர் மாயம்



உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் நேற்று, திடீரென மேகவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இந்த மேகவெடிப்பினை தொடர்ந்து அங்கு கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள் அடித்துச்செல்லப்பட்டன. மேலும், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மண்ணில் பலர் புதையுண்டதாகவும் அஞ்சப்படுகிறது. தற்போது வரை 20 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், 8 முதல் 11 ராணுவ வீரர்களும் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாசியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஊரில் முகாமிட்டிருந்த வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தங்கள் ராணுவ வீரர்கள் காணாமல் போன நிலையிலும் கூட மற்ற இராணுவ வீரர்கள் தளராமல், மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாராலி கிராமம் மற்றும் ஹர்சால் இராணுவ முகாம் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால், பலரை காணவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தர்காசி நிலைமை குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் கேட்டறிந்தேன். மாநில அரசின் கண்காணிப்பில் மீட்பு, நிவாரண குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. எந்த ஒரு நபருக்கும் உதவிகள் விடுபடாமல் இருக்கும்படி செயலாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்


banner

Related posts

திருப்பூரில் எஸ்.ஐ வெட்டிக் கொலை..விசாரணக்கு சென்றபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Ambalam News

நேபாளத்தில் வெடித்த போராட்டம் : துப்பாக்கி சூட்டில் 16 பேர் பரிதாப பலி, ஊரடங்கு உத்தரவு அமல்!

Ambalam News

5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..

Ambalam News

Leave a Comment