2020ல் லாக்டவுன் சமயத்தில் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் இவரத்து மகன் பெனிக்ஸ் இருவரும் தங்களது கடையை குறிப்பிட்ட நேரத்திற்குள் அடைக்கவில்லை என்று போலீசுக்கும், ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோருக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையதிற்கு அழைத்து சென்று அவர்ககள் மீது காவல்துறையை சேர்ந்த காட்டுமிராண்டிகள் கண்மூடித்தனமாக கொலைவெறி தாக்குதலை நடத்தினார்கள். இதில் படுகாயமடைந்த தந்தை மகன் இருவரும் அடுத்தடுத்த நாளில் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2,027 பக்க குற்றப்பத்திரிகையும், இரண்டாவது கட்டமாக 400 பக்கம் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை மதுரை முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுவரை 52 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தாக்கல் செய்த மனுவில், ‘‘இந்த வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அரசுக்கும், காவல்துறைக்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் அப்ரூவர் ஆக மாற விரும்புகிறேன். என்னை தவிர்த்து மற்ற காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும், உண்மைகளையும் நீதிமன்றத்தில் கூற விரும்புகிறேன். எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தையும், மகனையும் இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த வழக்கில் அப்ரூவராக மாறி அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன்’’ என கூறியிருகிக்கிறார்..
இந்த மனு கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ மற்றும் பாதிக்கப்பட்ேடார் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த மனு மதுரை முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜி.முத்துக்குமரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மதுரை மத்தியச் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனுவிற்கு ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சாத்தான்குளம் கொலை வழக்கு மற்றும் ஸ்ரீதரின் இடை மனு மீதான விசாரணையை வரும் 28 ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கை நீர்த்துப்போக செய்யும் சூழ்ச்சியாகவே இந்த மனுவை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தாக்கல் செய்துள்ளார். 5 வருடகாலமாக அமைதியாக வழக்கை எதிர் கொண்டவருக்கு தற்போதுதான் கடமை, கண்ணியம், கட்டுபாடு, மனசாட்சி உறுத்தல் ஏற்பட்டுள்ளதா.? 5 வருடமாக இவரது மனசாட்சி தூங்கிக்கொண்டிருந்ததா.?
தந்தையும் மகனும் இழந்த குடும்பதிற்கு நீதி கிடைக்க தான் அப்ருவராக மாறுவதாக கூறுவது முழுக்க முழுக்க நாடகம். சட்டத்தை நான்கு அறிந்து தெளிந்தவர் ஸ்ரீதர். வழக்கின் முக்கிய கட்டத்தில் மிக தெளிவாக அப்ருவர் நாடகத்தை அரங்கேற்றி வழக்கை குழப்ப நினைக்கிறார் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
உப்பை தின்றவன் திண்ணிர் குடித்துதானே ஆகவேண்டும்.