தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட நிலையில், நேற்றேய தினமே அவர் தமிழக்கத்தி டிஜிபி யாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் நடந்துவந்த டிஜிபி நியமன சர்ச்சை
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் இருந்தார். இவர் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழகத்துக்கு புதிய டிஜிபி நியமனம் செய்ய 9 அதிகாரிகளின் பெயர் பட்டியலை தமிழக அரசு யுபிஎஸ்சிக்கு அனுப்பியிருந்தது. இதற்க்கு முன்னரே, டிஜிபியாக நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது பொறுப்பில் இருக்க வேண்டும் அதுபோன்ற பதவிக்காலம் உள்ள அதிகாரிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதாவது ஓய்வு பெற 6 மாதங்கள் இருக்கும் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் அவர்களுக்கு பிறகு மீண்டும் அதிகாரிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதால் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது அதிகாரிகள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்திருந்தது.அதன்படி தமிழக அரசு சில அதிகாரிகளின் பட்டியலை கொடுத்திருந்தது. இதற்கிடையே தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது தமிழக அரசு. .
இந்த நியமனம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. போலீஸ் நிர்வாகத்தை தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் திட்டத்தால் நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் திமுக அரசு தாமதப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வரை சென்றது. இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையில் 3 வாரங்களுக்குள் நிரந்தர டிஜிபி நியமனத்தை முடிக்க உத்தரவிட்டது.
புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர்.?
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் சந்தீப் ராய் ரத்தோரை தமிழகத்தின் நிரந்தர டிஜிபியாக நியமித்துள்ளது. யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர்.? கடந்த 2024 ஆம் ஆண்டு சென்னை காவல் துறை ஆணையராக இருந்தார்.
சந்தீப் ராய் ரத்தோர் 1992ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் தமிழகத்தின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். கோவையில் துணை கமிஷனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ததில் முக்கிய பங்காற்றியவர்.
அதன் பிறகு சென்னை மாநகர துணை ஆணையராக பதவி வகித்த போது பராமரிப்பு செலவை குறைக்கும் வகையில் சிக்னல் விளக்குகளுக்கு பதில் எல்.இ.டி சிக்னல் விளக்குகளை அறிமுகம் செய்து வைத்தார். 2003 ஆம் ஆண்டு சிபிசிஐடி எஸ்பியாக பணியாற்றிய போது முத்திரைத்தாள் மோசடி விவகாரத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் முக்கியப் பங்காற்றினார். 2005 இல் தூத்துக்குடி எஸ்பியாகவும் 2010ஆம் ஆண்டு மத்திய தொழிலக பாதுகாப்பு படை டிஐஜியாகவும் 2014 இல் கடலோர பாதுகாப்பு ஐஜியாகவும், 2019 ல் தமிழக சீருடை தேர்வாணையத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தார். 2023 ஆம் ஆண்டு சென்னை மாநகர கமிஷனராக பொறுப்பேற்றார் சந்தீப் ராய் ரத்தோர்
அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அப்போது ஏற்கனவே ஆமஸ்டராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அறிவுறுத்தியதாக சர்ச்சைகள் எழுந்தது. அப்போது, இந்த கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடந்தது. இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல சதி என மூன்று முறை உளவுத் துறை எச்சரிக்கை வந்ததாக வெளியாகும் தகவல் உண்மையில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக காவல் துறைக்கு எந்த புலனாய்வு அமைப்புகளிடமிருந்தும் எந்த உளவுத் தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
இந்த கொலை சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. மேலும் போலீஸார் கைது செய்துள்ள 8 பேரும் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்றும் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் உள்துறை முதன்மை செயலாளராக இருந்த அமுதா, சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அப்போது அவர் காவலர் பயிற்சி கல்லூரியின் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் அருண் புதிய ஆணையராக பதவியேற்றார். தற்போது தேர்தல் ஆணையம் தமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்துள்ளது.
அன்றே கூறிய அம்பலம் செய்தி
ஆகஸ்ட் 23, 2025 அன்று, டிஜிபி விவகாரம் குறித்து, தேர்தல் நெருங்கும் வரை புதிய டிஜிபி நியமிக்கப்படாமல், இதே நிலை தொடர்ந்தால் யாரும் எதிர்பார்த்திராத வகையில் புதிய டிஜிபியை தேர்தல் ஆணையமே உட்கார வைத்துவிடும். சந்தீப் ராய் ரத்தோருக்கே வாய்ப்பு இருப்பதாக நமது அம்பலம் புலனாய்வு செய்தி தளத்தில் செய்தி வெளியிட்டது குறிப்பிடதக்கது.
-அம்பலம் செய்திக்குழு

