27 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக | அண்ணாமலை போட்டியிடவில்லை.. | மயிலாப்பூரில் தமிழிசை – சாத்தூரில் நயினார் நாகேந்திரன் போட்டி


அண்ணாமலையுடன் தொடர்ந்து பாஜக மேலிடம் பேசிவந்தகாத கூறப்பட்டது வந்த நிலையில், அண்ணாமலை தேர்தலில் போட்டியிட உறுதியாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி, கடந்த தேர்தலில் பாஜக சார்பில் 4 பேர் எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்ற நிலையில் அவர்களில் 3 பேருக்கு மட்டுமே தற்போது சீட் வழங்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 27 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து அறிவிப்பை வெளியிட்டார் அதனைத்தொடர்ந்து, அமமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதிமுக, அமமுக, தமாகா ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

பாஜகவுக்கு மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

பாஜக 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட மொடக்குறிச்சி, நாகர்கோவில், குளச்சல், ராமநாதபுரம், தளி, திருவண்ணாமலை, உதகமண்டலம், விளவங்கோடு ஆகிய 7 தொகுதிகளை மட்டுமே மீண்டும் பெற்றுள்ளது. பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த முறை வென்ற நெல்லை மற்றும் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் இந்த முறை பாஜக போட்டியிடவில்லை.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்முறையாக சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த முறை அவர் நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார். கடந்த முறை கோவை தெற்கில் வென்ற வானதி சீனிவாசன் இந்த முறை கோவை வடக்கில் களமிறங்க உள்ளார். கடந்த முறை நாகர்கோவிலில் போட்டியிட்டு வென்ற எம்.ஆர்.காந்திக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டு உள்ளது. மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக கிருத்திகா சிவகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்க உள்ளார். அவினாசி (தனி) தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் போட்டியிடுகிறார்.

விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி போட்டியிடுகிறார். எல். முருகன் – அவிநாசி நாகேஷ் குமார் – தளி மொடக்குறிச்சி – கிருத்திகா சிவகுமார் தங்கராஜ்- திருப்பூர் தெற்கு நயினார் நாகேந்திரன் – சாத்தூர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் – திருச்செந்தூர் எம்.ஆர். காந்தி – நாகர்கோவில் பி.ரமேஷ் – பத்மநாபபுரம் சிவக்குமார் – குளச்சல் விஜயதாரணி – விளவங்கோடு ஏழுமலை – திருவண்ணாமலை கருப்பு முருகானந்தம் – தஞ்சாவூர் ராமச்சந்திரன் – புதுக்கோட்டை ஆனந்தன் அய்யாசாமி – வாசுதேவநல்லூர் ஜி.பி.எஸ். நாகேந்திரன் – ராமநாதபுரம் பிரேம் குமார் – ராசிபுரம் தமிழிசை சௌந்தரராஜன் – மயிலாப்பூர் ராஜசிம்ம மஹிந்திரா (அஸ்வின்குமார்) – ஆவடி வானதி சீனிவாசன் – கோயம்புத்தூர் வடக்கு போஜராஜன் – உதகமண்டலம் உதயகுமார் – கந்தர்வகோட்டை கே.சி.திருமாறன் – திருப்பத்தூர் கவிதா ஸ்ரீகாந்த் – அறந்தாங்கி ராம சீனிவாசன் – மதுரை தெற்கு பாலகிருஷ்ணன் – ராதாபுரம் கோவி சந்துரு – திருவாரூர் பொன் பாலகணபதி – மானாமதுரை

இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாதது ஏன்.? அவரது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டார்களா.? தொகுதி ஒதுக்குவாதில் சிக்கலா.? என்ற விவாதம் பாஜகவினரிடன் பற்றிக்கொண்டுள்ளது.


banner

Related posts

ஆப்கானிஸ்தனில் நிலநடுக்கம் 800 பேர் பரிதாப பலி.. 2500 பேர் படுகாயம்.. இந்தியாவின் சில பகுதிகளிலும் நில அதிர்வு.!

Ambalam News

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Ambalam News

இரசாயன வாயு கசிவு : 80 பேர் மயக்கம்: கடலூர் சிப்காடில் இயங்கும் உயிர்ப் பலி இரசாயன ஆலையை மூட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Ambalam News

Leave a Comment