தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை – நிபந்தனை இன்றி திமுகவுக்கு ஆதரவு – கமல்ஹாசன்.. கமலஹாசன் செய்திருப்பது தியாகம் – முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின்


2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சி நேரடியாக போட்டியிடப் போவதில்லை என அதன் தலைவர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கமலஹாசன் தனது பதிவில், முதல்வர் அவர்களும், தமிழக பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்களும் அன்புடனும் பரிவுடனும் நடந்துகொண்டார்கள் என்பதை பதிவு செய்கிறேன்.
இன்றைக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்கு தரவாகச் சொல்லப்படும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.
அவர்களது தரப்பில் அதற்கான நியாயம் இருக்கிறது என்பதை நாம் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம். எப்படியாவது தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற மதிப்புடன் சக்திகள் சேர்ந்து செயல்பட வேண்டிய சூழலில் கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பே முக்கியமானது. நியாயமானதும் கூட. ஆனால், பேச்சு நடந்த விதமும் தொண்டர்களின் உணர்வுகளும் ஏற்க முடியாத ஒன்றாக இருந்தது என்பதை தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, திராவிட மாடல் 2.0 அரசு அமைவது இனிய தேவை. இது வெறும் ஆட்சி மாற்றமல்ல. காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தேசீயப்பாதை.


ஆகவே 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்றும் முடிவை தீர்மானித்துள்ளோம். “2026 சட்டமன்றத் தேர்தலில் மநீம போட்டியிடவில்லை. இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை” என நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.


கமலஹாசனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில்.,
அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் மநீம தலைவருமான கமல்ஹாசன், இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.
இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம்.
இது தியாகம் அல்ல, கடமை” என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மைய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


banner

Related posts

எடப்பாடி முதுகில் குத்தி விட்டதாக நான் சொல்லவில்லை.. ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகிறது – பிரமலதா விஜயகாந்த்

Ambalam News

செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்.! பரபரப்பு.!!

Ambalam News

திருவண்ணாமலை கோயில் முன்பு வணிக வளாகம் கட்ட நீதிமன்றம் தடை… பக்தர்களை வதைக்கிறதா.? அறநிலையத்துறை

Ambalam News

Leave a Comment