ஆர்.கே.நகர் தொகுதி | ஜெ.ஜெ.எபினேசர் – ஆர்.எஸ்.ராஜேஷ் இடையே அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசும் தவெக வேட்பாளர் மரிய வில்சன்..


சென்னையில் கொளத்தூர், சேப்பாக்கம், பெரம்பூர் போல ஆர்கே நகர் தொகுதி அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி யாருக்கு.? என்ற அலசல் தொகுதியின் நிலவரத்தை மேலும் சூடேற்றி வருகிறது.

2026 சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 5 முனைப்போட்டியால் தமிழகம் பரபரத்துக் கிடக்கிறது. ஒருசில தொகுதிகளில் அதிமுக திமுக சார்பில் பலமான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அந்த தொகுதிகளை நோக்கி அனைவரின் கவனமும் திரும்பியிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு தொகுதிதான் ஆர். கே. நகர் தொகுதி. முதலில் இந்த தொகுதி திமுக சிட்டிங் எம். எல்.ஏவான ஜெ.ஜெ.எபிநேசருக்கு இந்தமுறை சீட் கிடைக்காது என்ற செய்தி பரவியது. ஆனால் எவ்வித நெருக்கடியும் இன்றி திமுக தலைமையிடம் சீட் பெற்று களத்தில் நிற்கிறார் திமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏ ஜெ.ஜெ.எபினேசர். அதிமுக வேட்பாளராக ஆர்.எஸ்.ராஜேஷ், தவெக வேட்பாளராக ஜேப்பியார் குழும தலைவர் மரிய வில்சன் என வரிசைகட்டி நிற்பதால் ஆர்.கே.நகரில் கடும் போட்டி நிலவுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் நடச்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாகப் பார்க்கப்படும் ஆர்.கே.நகர். தொகுதியில் 2026 தேர்தலிலும் முக்கிய கட்சிகள் சார்பில் பலமான வேட்பாளர்கள் களமிறங்குவதால் இந்த தொகுதி கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் 2015ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ஜெயலலிதா. அதைத்தொடர்ந்து, 2016 சட்டசபை பொதுத் தேர்தலிலும் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன், சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஜே.ஜே.எபினேசர், அதிமுகவின் ஆர்.எஸ்.ராஜேஷ் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் சுமார் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் எபினேசர் வெற்றி பெற்றார். 1977 ஆம் ஆண்டு முதல் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக 7 முறையும், திமுக, காங்கிரஸ் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த முறை ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏவும் திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான எபினேசர், தவெக சார்பில் ஜேப்பியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் மரிய வில்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஆர்.எஸ்.ராஜேஷ் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்து, தொகுதிக்குள் கட்சியினர் மத்தியில் பெயரெடுத்திருக்கிறார். கட்சியினர் பக்கபலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு களமிறங்குகிறார். திமுக எம்.எல்.ஏ ஜெ.ஜெ.எபினேசர் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவராகத் வலம் வருகிறார். தனிப்பட்ட முறையில் உதயநிதியின் ஆதரவை பெற்றவர் என்பதால் கூடுதல் செல்வாக்கோடு களத்தில் நிற்கிறார். அதன் காரணமாக, உட்கட்சி பூசல் இன்றி இருப்பதால், திமுக வேட்பாளர் ஜெ.ஜெ.எபினேசருக்கு தற்போதைய சூழலில் களம் சாதகமாக இருக்கிறது.

தவெக சார்பாக, ஜேப்பியார் குழும தலைவர் மரிய வில்சன் மரிய வில்சன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். கவர்ச்சிகரமான சொந்த வாக்குறுதிகளை அளித்துள்ளார். தான் வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 100 மாணவர்களுக்கு இலவச கல்வியும், முதியோருக்கு வீடு தேடி ரேஷனும் கொடுப்பேன். தொகுதியில் ஓராண்டுக்கு கணவரை இழந்த 25 பெண்களின் குழந்தைகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பேன். ஆண்டுக்கு 25 பேரை ஹஜ் மற்றும் ஜெருசலேம் பயணத்துக்கு அனுப்பி வைப்பேன் என வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.

எனவே மூன்று கட்சிகளுக்கும் இடையே கடினமான போட்டி ஏற்பட்டுள்ளது. ஆர். கே. நகர் தொகுதியில் அரசியல் கட்சியினர் அனல் பறக்க களமாடி வருகின்றனர்.


banner

Related posts

சூளைமேடு கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்.. வாய் கட்டப்பட்டிருந்ததாக மாநகராட்சி கட்டுக்கதை.!?

Ambalam News

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை சூலூர்பேட்டையில் குற்றவாளி கைது

Admin

கேப்டன் பிரபாகரன் திரைப்படம் 800 திரையரங்குகளில் ரீரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்

Ambalam News

Leave a Comment