திருச்சி திமுக கவுன்சிலர் படுகொலை | கொலை நடந்த இடத்தில் திருச்சி எஸ்.பி.நாகரெத்தினம் நேரில் ஆய்வு..


திருச்சியில் திமுக கவுன்சிலர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தப்பாா் பேரூராட்சிக்குள்பட்ட பாரதிபுரத்தைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் ரஞ்சித்குமாா். இவா், கூத்தப்பாா் பேரூராட்சியில் 11-வது வாா்டு கவுன்சிலராக உள்ளாா். சோழன்மாதேவியில் புதிதாக வீடு கட்டி அண்மையில் குடியேறியுள்ளாா

திருவெறும்பூா் அரசு ஐடிஐ எதிரே உள்ள அரசு மதுபானக் கடையில் பாா் நடத்தி வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு திருவெறும்பூரில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலையில் நவல்பட்டு புதுத்தெரு பகுதியில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்துள்ளாா்.இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து தலையை சிதைத்து, கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

அவ்வழியாகச் சென்றவா்கள் காவல்துறைக்கு அளித்த தகவலின்பேரில் அங்குசென்ற போலீஸாா், ரஞ்சித்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலை சம்பவம் நடந்த இடத்துக்கு திருச்சி எஸ்.பி. செல்வநாகரெத்தினம் நேரில் வந்து ஆய்வு செய்து சென்றிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டூர். மலைக்கோயில்,திருவெறும்பூர் அண்ணா வளைவு, பாய்லர், துவாக்குடி, சோழமாதேவி,போன்ற பகுதிகளில், பிற பகுதிகளை சேர்ந்த கிரிமினல் குற்றவாளிகள் உலாவுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்


banner

Related posts

போதைப் பொருள் கடத்தல் | போதைபொருளை உன் குழந்தைக்கு கொடுப்பியா.? எஸ். பி. அதிரடி

Ambalam News

பாஜக தொகுதியான மயிலாப்பூரில் பிரச்சாரத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி.! – மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டி.?

Ambalam News

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் – கையும் களவுமாக சிக்கிய விஏஓ கைது

Admin

Leave a Comment