போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து”.. திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம் – விசிக தலைவர் திருமாவளவன்


ஏப்ரல் 23 ஆம் தேதிதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு மெகா கூட்டணியோடு திமுகவும், அதிமுக – பாஜக, பாமக அமமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறார்கள். திமுக பிரம்மாண்ட கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது. திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதே தொகுதி பங்கீட்டில் சிக்கலை உருவாக்கியுள்ளது. சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு கடந்த முறையை விட குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விசிக 10 தொகுதிகள் கேட்ட நிலையில், 8 தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமாவளவன் மனம் திறந்து பேசியுள்ளார்.

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்தமுறை அவர்களும் அதைவிட 7-8 தொகுதிகளில் குறைவாக போட்டியிடுகிறார்கள். திமுகவே தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளதால், நாங்களும் விட்டுக் கொடுக்க வேண்டியது எங்கள் பொறுப்பாகும்.

தொகுதி பங்கீடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு தான் பதில் சொல்ல வேண்டும். அதைவிடுத்து திமுக கூட்டணி கட்சிகளை அவர் இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது. திமுக அதிமுகவை இழிவாக பேசுவதாக அவர் நினைக்கிறார். அப்படியென்றால் அவர் திமுக மீதுதான் விமர்சனம் வைக்க வேண்டும். ஆனால் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளை விமர்சிக்க கூடாது. அதிமுக கூட்டணியில் வலுவாக உள்ள கட்சிகள் ஒன்றிரண்டு கட்சிகள் தான். அங்கு அதிமுக, பாஜகவை தவிர வேறு எந்தக் கட்சியும் வலிமையாக இல்லை. ஆனால் திமுக கூட்டணியில் ஏற்கனவே 18 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்போது புதிதாக பல கட்சிகள் இணைந்துள்ளன. நிறைய கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக தான் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணியில் நாங்கள் 8 தொகுதிகளில் 2 பொது தொகுதிகள் கேட்டோம். அதை திமுகவில் ஒதுக்கிவிட்டனர். போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து” என்றார்


banner

Related posts

திமுகவில் சலசலப்பு | அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு தொகுதியை அள்ளிக்கொடுத்த திமுக.. வருத்தத்தில் உடன் பிறப்புகள்.? களம் சொல்லப்போக்கும் வரலாறு என்ன.?

Ambalam News

அடேங்கப்பா..! தவெக அரசின் அதிரடி..!? சார்பதிவாளர் அலுவலக முறைகேடுகள் முதல்வர் விஜய்க்கு முழுமையாக தெரியுமா.?

Ambalam News

50 சீட் கேட்கும் பாஜக..!? அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி.? செங்கோட்டையனின் பகீர் அரசியல்.??

Ambalam News

Leave a Comment