காலம் பேசாது.. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” தவெகவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி..


திமுக கொடுத்த பயத்தால், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். தற்போது ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சை அரசியல் நாகரிகமற்ற செயல் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார் தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பெயரைக் குறிப்பிடாமல் அவரை விமர்சித்தது குறிபிடத்தக்கது. பாஜக அண்ணாமலையும் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமரசித்திருந்தார். ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முதலில், ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் திமுக தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்திருந்தன. அதைத்தொடர்ந்து, பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தற்போது கண்டனம் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார், ரஜினிகாந்த் அவர்கள் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை ரஜினிகாந்த் அவர்கள். எம்ஜிஆரின் அன்பையும், ஜெயலலிதா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல. அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல்.” எனத் தெரிவித்திருந்தார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம்.

அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த ‘மனவலிமை’ வாய்த்திருக்க வேண்டும். தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தி இருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார். அத்தகைய மனிதரின் ‘மனவலிமை’ குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம்.” எனத் தெரிவித்திருந்தார்.

தற்போது தவெக ஆதவ் அர்ஜுனாவின் கருதிற்கு தக்க பதிலடி கொடுத்து ஊடகங்களுக்கு பேட்டியலித்துள்ளார். தனக்கு ஆதரவளித்த அரசியல் கட்சி தலைவர்கள் உடக்கத்தினருக்கு நன்றி தெரிவித்த அவர், ”காலம் பேசாது.. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று தவெக கட்சியினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்


banner

Related posts

அண்ணா என்கிற பசு மாட்டின் மீது நிற்கும் காக்கா தான் இப்போதைய திமுக ஆட்சி | விஜய்யிடம் என்ஜினே இல்லை | நான் தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுகிறேன் – பாஜக அண்ணாமலை

Ambalam News

தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது |3 ஆண்டு சர்ச்சை..! ஆளுநர் உரையை படிப்பாரா.?

Ambalam News

திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள் | போல் டிராக்கர் (Poll Tracker) கருத்துக் கணிப்பு | 2 மிடத்தில் அதிமுக – 3 வது இடத்தில் தவெக..! வெளியானது பரபரப்பு சர்வே.!

Ambalam News

Leave a Comment