இறந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் – தவெக விஜய்


கரூரில் தவெக்க பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல் விஜய் சென்று விட்டார். இதனால் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இன்று விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.

நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.

என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.

நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.

அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவரது பிரச்சார பயணங்கள் அனைத்தையும் ஒத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.


banner

Related posts

வாக்காளர் பட்டியல் திருத்த முறைகேடு விவகாரம் : கள்ள மௌனம் காக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி – அமைச்சர் துரைமுருகன் அறிக்கை

Ambalam News

செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், என்ன செய்யப் போகிறார்கள்.? எப்படி சமாளிக்கப் போகிறார்.? எடப்பாடி பழனிச்சாமி

Ambalam News

திருச்சி மத்திய சிறை காவலர்கள் 20பேர் மீது வழக்குப்பதிவு – விலகாத மத்திய சிறையின் மர்மங்கள்

Ambalam News

Leave a Comment