சினிமா தியேட்டராக மாறியது சட்டசபை | ஆக்டர் விஜய் என்பதை மறந்து இனியாவது முதலமைச்சராக நடந்து கொள்ளவேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்


தமிழகத்தில் தவெக ஆட்சியமைத்த சில நாட்களிலேயே பாலியல் குற்றங்கள், கொலை, ஆணவக்கொலைகள், போதைப்பொருள் நடமாட்டம், கள்ள லாட்டரி என தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது. இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கி அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து முறையான நடவடிக்கை எடுக்காதது ஏன்.? என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆலோசனைகள் குறித்து முதல்வர் இதுவரை வாய் திறக்க வில்லை. இதை கேட்டால் சட்டமன்றத்தில் தவெக அமைச்சர்கள் எங்கள் தலைவர் கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே என்ன ஆனது என்று தெரியும்ல.. என்ற ரீதியில் நக்கலாக பதிலலிக்கின்றனர். அதையும் முதல்வர் ரசிக்கிறார். இந்நிலையில், இன்று சட்டசபையில் ஆளுநர் உரைக்கு பதிலுறை என்ற பெயரில் அவதூறுகளை அள்ளி வீசி ஆக்சன் செய்து காட்டி தனது தொண்டர்களையிம் கட்சி நிர்வாகிகளையும் சட்டமன்ற உறுப்பினார்களையும் உசுப்பிவிடும் வகையில் சைகை செய்து இருக்கிறார்.

போதாக்குறைக்கு விவசாயியாக பிறக்க ஆசப்படும் முதல்வர் விஜய் எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை பகிரங்கமாக கொச்சை செய்துள்ளது. விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் விஜய் என்பதை மறந்து இனியாவது முதலமைச்சராக நடந்து கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.

பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.

முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் – பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,

மின்வெட்டு – விவசாயிகள் பிரச்சினை – மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு – வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.

எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.

செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.

ஆகவே, Actor Vijay என்பதை மறந்து, இனியாவது
Chief Minister of Tamil Nadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.


banner

Related posts

‘’தாயுமானவர் திட்டம்’’ இல்லங்கள் தேடி ரேஷன் பொருட்கள்..! கடத்தல்காரர்களுக்கு கொண்டாட்டம் – சமூக ஆர்வலர்கள் விமர்சனம்!

Ambalam News

அதிரடி அரசியல் ஆட்டத்திற்கு தயாராகும் ஒபிஎஸ்.. தாக்குபிடிப்பாரா.? இபிஎஸ்..

Admin

‘’உங்களுக்காகவே குரல் கொடுக்க’’ ‘’உங்க விஜய் நா வாரேன்’’ தொடங்கியது விஜய்யின் தேர்தல் பிரச்சாரம்..

Ambalam News

Leave a Comment