எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக-திமுக கூட்டணி திட்டம் | உடைந்த அதிமுக…? சி.வி சண்முகம் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு…


20206 சட்டமன்ற தேர்தலில் அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் தவெகவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இருப்பினும் இத்தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத தவெக ஆட்சியமைக்க முடியாமல் தடுமாறியது. இந்நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக போன்ற கட்சிகள் திமுகவோடு கலந்தாலோசித்து தவெகவுக்கு ஆதரவளித்தனர். இவர்களின் ஆதரவோடு தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் அதிமுகவுக்குள் பெரும் உட்கட்சி மோதல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்தது. அதிமுகவின் சி.வி.சண்முகம் தலைமையில் எஸ்.பி.வேலுமணி விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சம்பவம் வெளிவந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 17 எம். எல். ஏ கிகளும் சி.வி.சண்முகம் தலைமையில் மற்றவர்களும் சட்டமன்ற சபாநாயகரை சந்தித்தனர்.

தற்போது பத்திரிக்கையார்களை சந்தித்த சி.வி.சண்முகம் திமுகவுடன் கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருப்பதாக கூறி, தங்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதன் காரணமாக நாங்கள் கலந்தாலோசித்து, தவெகவை ஆதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இடையே பேசிய எஸ். பி.வேலுமணி அதிமுகவுக்குள் எந்த பிளவும் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில், கூட்டணி கட்சியான பாஜக அதிமுகவின் உட்கட்சி பூசலை இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


banner

Related posts

ஆப்கானிஸ்தனில் நிலநடுக்கம் 800 பேர் பரிதாப பலி.. 2500 பேர் படுகாயம்.. இந்தியாவின் சில பகுதிகளிலும் நில அதிர்வு.!

Ambalam News

ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டம்..

Ambalam News

இபிஎஸ் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டு, அதிமுகவை ஒன்றிணைக்க தொண்டர்கள் கோஷம்..

Ambalam News

Leave a Comment